எல்டிடிஇ அமைப்புக்கு & நாடு கடந்த தமிழீழத்துக்கும் இலங்கை அரசு தடை

எல்டிடிஇ அமைப்புக்கு &  நாடு கடந்த தமிழீழத்துக்கும் இலங்கை அரசு தடை

”ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 1373ன்கீழ், இலங்கை அரசு 16 அமைப்புகளை தடை செய்துள்ளது. அரசின் புதிய பிரகடனப்படி, இந்த அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, இந்த அமைப்புகளுடன் தொடர்புக் கொள்வது சட்டவிரோதமாகும். அப்படி தொடர்பு கொள்ளும் அமைப்புகள், தனிநபர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இதன்படி, எல்டிடிஇ அமைப்பும், அதன், ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ (டிஜிடிஇ), உலக தமிழ் அமைப்பு (ஜிடிஎப்), பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு (பிடிஎப்) உள்ளிட்ட 16 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.” என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ltte logo
கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறிய நிலையில் இலங்கை ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் ருவான் வானிகசூரியா,”இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பு உள்பட 16 இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளது. அவற்றுள் முக்கியமானது விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ.), தமிழ் ஈழ தேசிய மாற்று அரசு (டி.ஜி.டி.இ), ஐரோப்பாவில் இயங்கிவரும் உலக தமிழ் கூட்டமைப்பு (ஜி.டி.இ.), லண்டனில் இயங்கிவரும் பிரிட்டிஷ் தமிழ் கூட்டமைப்பு (பி.டி.எப்) ஆகியவை. ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானம் 1373-ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது முதல் இந்த அமைப்புகளுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வது சட்டவிரோதம் ஆகும். இந்த அமைப்புகள் எல்லாம் 4 தனி நபர்களால் நடத்தப்படுகிறது. இந்த தனி நபர்கள் இலங்கைக்குள் வந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.இந்த அமைப்புகள் அனைத்தும் 4 தனிநபர்கள் தலைமையிலேயே இயங்குகின்றன. இந்த அமைப்பினர் குறித்து விசாரணை நடத்தும்படியும், இவர்களின் தீவிரவாத செயல்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து விசாரிக்கும்படியும் சர்வதேச நாடுகளிடம் கேட்டுக் கொள்ள உள்ளோம். மேலும், எல்டிடிஇ அமைப்பின் முன்னணி உறுப்பினர்களை குற்றவாளிகள் என்றும் வலியுறுத்த உள்ளோம்.”என்று ருவான் கூறினார்.

Related Posts