32°C
விளம்பரம்
Advertisement

அமேசான் ஆன்லைன் தளத்தில் ஃப்ரீடம் சேல் கொண்டாட்டம்!

admin சேலம் Published: August 2, 2019 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் இந்திய சுதந்திர தினத்தை மின்னிட்டு இந்தாண்டும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ஆன் லைன் விற்பனைத் தளத்தில் ‘ஃப்ரீடம் சேல்’ தொடங்க உள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்தது இல்லையா?. அந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர் களுக்கு சலுகைகளை வழங்கும். இந்த சூப்பர் விற்பனையில் அமேசான் வழங்கும் தள்ளுபடிகள் குறித்த விவரம் பின்வருமாறு…

1. ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி
2. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்,
3. பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி
4. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி
5. வீட்டு உபயோக பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி
6. ஆடை, ஆபரணங்கள், பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி
7. பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடி
8. அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி

அமேசான் சுதந்திர தின தள்ளுபடி விற்பனையை இம்முறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும் இந்த விற்பனைத் திருவிழா ஆகஸ்ட் 11-ம் தேதி உடன் நிறைவடைகிறது. எஸ்பிஐ வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித உடனடித் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி நண்பகல் 12 மணி முதலே இந்த விற்பனைத் திருவிழா தொடங்குகிறது. ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவிகிதம் வரையில் இம்முறை ஆஃபர் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி M40, ஓப்போ K3 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஃப்ரீடம் சேல் 7 ஆம் தேதியே துவங்கும்.

இந்த தள்ளுபடி விவரங்கள் மேலோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டுகளின் தயாரிப்புகள், எந்த மாடல்களுக்கு எவ்வளவு ரூபாய் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்