32°C
விளம்பரம்
Advertisement

இறைவன் அருளால், மக்கள் ஆதரவால் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி – ரஜினி ஆசை!

admin சேலம் Published: April 9, 2019 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இறைவன் அருளால், மக்கள் ஆதரவால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பைத்தான் அவர்கள் முதலில் செயல் படுத்த வேண்டும். இது தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.

ஏ.ஆர் முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘தர்பார்’ என்ற டைட்டிலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான அடுத்த வினாடி, ஃபேஸ் புக், ட்விட்டர், இஸ்டா என வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தெறிக்க விட்டனர் ரஜினி ரசிகர்கள். இந்திய அளவில் ட்விட்டரில் #Darbar ட்ரெண்டானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஜினி, “‘தர்பார்’ என்ற படத்தின் தலைப்பு அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றார். அவரிடம், அரசியலில் பிரவேசித்துள்ள கமல்ஹாசனுக்கு தங்களுடைய ஆதரவு உள்ளதா? கமலின் அரசியல் பயணம் குறித்த உங்கள் பார்வை என்ன? உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ‘மக்களவைத் தேர்தலில் என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதில், எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல், இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. இதைப் பெரிதாகி நமது நட்பை சீர்குலைத்திட வேண்டாம்’ என்றார்.

அவரிடம் பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நேற்று வெளியான பாஜக தேர்தல் அறிக்கையில், நாட்டில் உள்ள நதிகளை இணைக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற பாஜக தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கோரிக்கை, இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நான் பேசியிருக்கிறேன்.

இறைவன் அருளால், மக்கள் ஆதரவால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பைத்தான் அவர்கள் முதலில் செயல் படுத்த வேண்டும். இது தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை’என தெரிவித்து விட்டு விருட்-டென்று வீட்டுக்குள் போய் விட்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்