32°C
விளம்பரம்
Advertisement

கிழக்கு இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி!

admin சேலம் Published: October 28, 2018 1 நிமிட வாசிப்பு Updated: October 29, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இந்தியாவின் தரை வழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும்  ரயில்வேயின் கிழக்கு இந்திய ரயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனங்கள் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட பிரிவுகள்: அக்வாடிக், கூடைப்பந்து, சைக்கிளிங், கபடி, வாலிபால், வில்வித்தை, பாட்மிண்டன், கிரிக்கெட், பவர் லிப்டிங், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது : 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : சில பிரிவுகளுக்கு பிளஸ் 2வும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மற்றும் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.

Chairman, Railway Recruitment Cell, Eastern Railway, 56, C.R.Avenue, RITES Building, 1st Floor, Kolkata – 700 012

கடைசி நாள் : 2018 நவ., 26.

விபரங்களுக்கு: http://139.99.53.236:8080/rrcer/Notification_Sports_Quota.PDF

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்