தமிழ் குரல் / AI Voice
பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

‘துமாரி சுலூ’ என்ற ஹிட் அடித்த இந்திப் படத்தின் மொழி மாற்றமே இது. அதாவது பாம்பேயில் தன்னுடைய மகன் மற்றும் கணவருடன் ஹவுஸ் வொய்ஃபாக வாழ்ந்து வருகிறார் சுலு என்கிற சுலோச்சனா (வித்யா பாலன்). வீட்டில் மூன்றாவது பெண். மூன்று முறை முயன்றும் 12 ஆவது ஃபெயில். இதற்காக அடிக்கடி குடும்ப நிகழ்வுகளில் அவமானப்படுத்தப்படுகிறார். இதனாலேயே தன்னை வெற்றியாளராக அடையாளப்படுத்திக் கொள்வதில் தீவிரமாக இயங்குவார் சுலூ. மியூசி கல் சேர், லெமன் இன் த ஸ்பூன், லதா மங்கேஷ்கர் சோகப் பாடல் போட்டி என அவரின் வெற்றி வரலாற்றுக்குப் பெரியது, சின்னது என வித்தியாசமெல்லாம் கிடையாது. அப்படியான ஒரு வெற்றி வேட்டைக்காகத்தான் `வாவ் எஃப்.எம்’ நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பிரஷர் குக்கர் பரிசு ஜெயிப்பார். இங்கே இன்னொரு விஷயம், சுலூவிற்கு இது அது என இல்லை பல விஷயங்கள் செய்ய விருப்பம். ஒருமுறை கணவருடன் காரில் செல்லும் போது “நாம டாக்ஸி பிசினஸ் தொடங்குவோமா… சுலோச்சனா டாக்ஸி சர்வீஸ், பேரு எப்படி இருக்கு” எனக் கேட்கும் டைப்.
குக்கர் வாங்க ரேடியோ ஸ்டேஷன் செல்பவருக்கு உதிக்கிறது ஆர்.ஜே ஆசை. கூடவே அது நிறைவேறவும் செய்கிறது. ஆனால், வேலை நேரமும், வேலையின் தன்மையும் வேறு. இரவில் போன் செய்பவர்களிடம், ஹஸ்கி + செக்ஸி வாய்ஸில் உரையாட வேண்டும் (ஸ்பாய்லர் கிடையாது, இந்த மேட்டர் டிரெய்லரிலேயே சொல்லப்பட்டதுதான்). முதல் ஷோவுக்கே வருகிறது கணவர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து எதிர்ப்பு. மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ். அஷோக் என்கிற அடையாளத்தை தாண்டி வர நினைக்கும் சுலுவின் நிலை என்ன ஆகிறது என்பதைச் சொன்னதுதான் `துமாரி சுலு’.
மேற்படி ’சுலு’ ரோலில் நம்ம ஜோதிகா நடித்து முடித்து விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் குழு இந்த ‘காற்றின் மொழி’காக பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. பாடல் எழுத தெரிந்தவர்கள்,சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப் போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்பாடலுக்கான ட்யூன் இதோ:
https://www.youtube.com/watch?v=KAYdProfTrc&feature=youtu.be
சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ).
போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம்.

