தமிழ் குரல் / AI Voice
நம்ம கோலிவுட்டைப் பொறுத்த வரை வருஷத்துக்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளி யாவது வழக்கமாகி விட்டது. அப்படி வெளியாகும் படங்களில் எத்தனை வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறது என்று கேட்டால் அதை அலச இது நேரமில்லை. இந்த சினிமாவை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. இந்த வியாபாரத்தை நடத்த ரொம்ப மெனக் கெட வேண்டும். அப்படி மெனக்கெட்டு ஒரு மறைந்து போன தமிழன் வரலாற்றை இன்றைய இளைஞர்களும் அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டு சில பல கோடி செலவில் ‘சீமராஜா’ என்ற சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.
நம் தமிழகத்தில் இப்போது பல மாவட்டங்கள் இருப்பது போல் முன்னொரு காலத்தில் பல ஜமீன்க ள் இருந்தன(ர்). அப்படி இருந்து இன்றளவும் காணாமல் போகாத சிங்கம்பட்டி சமஸ் தானத்தை சேர்ந்த ராஜாவான நெப்போலியனின் வாரிசுதான் ஹீரோ சீமராஜாவாகிய சிவ கார்த்திகேயன். தன்னை இன்னிக்கும் ராஜாவாக பாவித்தபடி குதிரை வண்டியில் ஊர் சுற்றியப்படி, கைவசமுள்ள குடும்ப சொத்தில் தான தர்மங்களையெல்லாம் செய்து ஹேப்பியாக வலம் வந்துக் கொண்டிருக்கி றார். இதற்கிடையே இரண்டு ஊர்களுக்கு பொதுவான மார்க்கெட்டை தங்களது சுயநலத்திற்காக நீதிமன்ற வழக்கு மூலம். அதே ஊர் வில்லன் லால் மற்றும் அவரது மனைவி சிம்ரனும் மூடிவிட, இது தொடர்பாக சிவகார்த்திகேயனின் குடும்பத்துக்கும், லால் குடும்பத்திற்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
அதே சமயம் சமந்தாவை கண்டதும் காதல் கொள்ளும் சிவகார்த்திகேயன் தனக்கே உரிய பாணி யில்,தொரத்தி தொரத்தி காதலை வளர்க்கிரார், அப்படியே மூடிக்கிடக்கும் மார்க்கெட்டை தனது சாமர்த்தியத்தால் கைப்பற்றி இரண்டு ஊர் மக்களுக்கும் பொதுவானதாக அறிவித்தவுடன், சமந்தாவுக்கும் சிவா மீது காதல் மலர, அந்த நேரத்தில், மார்க்கெட் விஷயத்தில் சிவாவுக்கு வில்லனாக இருந்த லால், காதலிலும் சிவாவுக்கு வில்லனாகி விடுகிறார்.
இந்நிலையில் விவசாயம் செய்ய முடியாததால் ஜமின் கொடுத்த நிலங்களை லால் மூலம் விற்க விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். அதை நெப்போலியன் தடுக்கிறார். இதில் அவமானப் படுத்தப் பட்டு நெப்போலியன் இறந்து விடுகிறார். இதனையடுத்து ராஜாவாக பதவியேற்கும் சிவகார்த்தி கேயன் தனது தாதாவிடம் ஆசி பெறுகிறார். அப்போது சிங்கம்பட்டி சமஸ்தானம் பற்றியும், தனது முன்னோர்கள் பற்றியும் சிவகார்த்திகேயனிடம் தாத்தா எடுத்துரைக்கிறார்.
அப்போதுதான் பிளாஷ்பேக் ஓப்பன். 14-ம் நூற்றாண்டு ராஜாவாக இன்னொரு சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். அவரின் போர் வெற்றி மற்றும் சாதூரியம் பற்றி தெரிந்து கொள்கிறார். மேலும் பல ஆண்டுகளாக தடைபட்ட ஊர் திருவிழாவை நடத்தவும் முயற்சி எடுக்கிறார். இந்நிலையில் இவர்களது காதல் விஷயம் தெரிந்த லால் மகளை தனது கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கிறார். ஊர் திருவிழாவை சிவகார்த்திகேயன் நடத்தினாரா? சமந்தாவை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டாரா? விவசாயிகளின் நிலங்களை லாலிடம் இருந்து மீட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.
இளசுகளின் இளவரசன் என்ற பெயரெடுத்த சிவகார்த்திகேயன் சீமராஜா, கடம்பவேல்ராஜா எனும் இருவேடங்களில் வந்து கவர்ந்தாலும் முக பாவனையின் முக்கியத்துவத்தை இன்னும் அறியாத வராகவே இருக்கிறார். ஆனாலும் இளவரசன் செய்யும் சேட்டைகள் குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. கடம்பவேல் ராஜா ரோலை (மீசையை அம்புட்டு தடவு தடவுன்னு தடவணுமா சிவா?)பாகுபலியைப்போல் பிரமாண்டம் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் உருவாக்கப் பட்டுள்ள பிளாஷ்பேக் ஜமீன் கதையை இன்னும் சற்று நம்பகத்தன்மையுடன் சுவாரஸ்யமாக கதை ஆக்கி இருக்கலாம்.
சூரி சில பல படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் தனது பங்களிப்பை ரொம்ப சரியாகக் கொடுத்தி ருக்கிறார். ஆஸ் யூசுவல் பாவாடை, தாவணி, புடவையுடன் கிராமத்து பி.டி. டீச்சராக சமந்தா வந்து வந்து செல்கிறார். கம்பு சுற்றும்போது வீரமங்கையாக தோன்றுபவருக்கு ஒரு சோலோ ஃபைட் கொடுத்திருக்கலாம். அப்பா ராஜாவாக நடித்துள்ள நெப்போலியனுக்கு காட்சிகளும் இல்லை, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கேரக்டரும் இல்லை. வில்லனாக வரும் லால் காட்சிகளில் மிரட்டியுள்ளார். சிம்ரனின் நடிப்பும், டயலாக்கும் காட்சிக்கு பொருந்தவில்லை.
டி.இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே ரசிக்கும் வகையில் இருந்தாலும் அவருடைய ஓல்ட் சாங்க்ஸ் சிலவற்றை நினைவுப்படுத்துகிறது.ஆனாலும் பின்னணி இசையில் தனிக் கவனம் செலுத்தி ஸ்கோர் செய்துள்ளார். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறது. படம் முழுக்க பளிச் பளிச் என்று இருக்கிறது.
இன்றைய கோலிவுட்டின் வசூல் ராஜாவான சீமராஜாவில் இணைந்துள்ள பொன்ராமிற்கு இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றிதான். உப்பு, புளி, கரம், இனிப்பு எல்லாம் போட்டு கலந்து கட்டிய விருந்துதான். என்றாலும் குழந்தைகள் மற்றும் பெண்களை கவரும் காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்தியவர் இம்புட்டு செலவு செய்த புரொடியூசர் பேரைக் காப்பாற்ற கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் சீமராஜா பெண்கள் குழந்தைகளை அதிகம் கவர்வான்.
மார்க் 5 / 3

