32°C
விளம்பரம்
Advertisement

சீமராஜா ரிசல்ட்? – டைரக்டர் பொன்ராம் பேட்டி!

admin சேலம் Published: September 11, 2018 2 நிமிட வாசிப்பு Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா நடித்து வெளியாகும் படம் ‘சீமராஜா’. இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளி வர இருக்கிறது. மேலும் சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர் ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இதனிடையே இந்த படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதா கவும், அப்படி படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். இது தங்களது திரையுலக வாழ்க்கையையே பாதிக்கும் என்பதால், சட்ட விரோத மாக இணைய தளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி படத் தயாரிப் பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து  சீமராஜா படத்தை இயக்கிய அனுபவம் குறித்து பொன்ராமிடம் கேட்டப் போது , “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்” என சிரிக்கிறார் . முழு படக் குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது” என்கிறார்.

சீமராஜா பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுது போக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

“அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள் தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்