32°C
விளம்பரம்
Advertisement

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் போலந்து நாட்டிலும் ரிலீஸ்!

admin சேலம் Published: August 29, 2018 2 நிமிட வாசிப்பு Updated: August 30, 2018 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ திரைப்படங்களை தொடர்ந்து  பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் வகையில் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகை யில் “கரோக்கி பூத்” என்ற விளம்பர யுத்தியை கையாண்டு வருகின்றனர் படக் குழுவினர். திரை அரங்குகளில் அமைக்க பட்டு இருக்கும் பிரத்தியேக பூத்துகளில் “சீம ராஜா” படத்தின் பாடல்கள், lyric video எனப்படும் பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு dubsmash செய்யலாம். இது யூ tube இல் பதிவு செய்து வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் வாய்ப்பு கிட்டும்.

இதனிடையே தற்போது  ‘சீமராஜா’ படத்தை போலந்து நாட்டில் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  செவன்த் சென்ஸ் சினிமாடிக்” என்ற புதிய நிறுவனம்  இப்பட விநியோகத்தை பெற்று போலந் தில் வெளியிடுகிறது. இதற்கு முன் போலந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி – அஜித் ஆகியோர் படங்கள் மட்டுமே வெளியாகி யுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக் சிவகார்த்திகேயன் படமும் வெளியாகவுள்ளது.

ஆனால் இதுவரை போலந்தில் உள்ள எந்த திரையரங்கில் ‘சீமராஜா’ வெளியாக உள்ளது என்கிற தகவல் வெளியாகவில்லை. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். .

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்