32°C
விளம்பரம்
Advertisement

ஜெ., வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க போட்டி போடுவோர்க்கு சில கேள்விகள்!

admin சேலம் Published: August 29, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




முன்னாள் நடிகை, முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க கடும் போட்டி என்பதுதான் இப்போதைய முக்கிய செய்தி. இந்த போட்டியில் இயக்குனர் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் இருப்பதாக சொல்கிறார்கள். யார் வேண்டுமானலும் இருந்துவிட்டுப்போகட்டும். அவர்களிடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்கிறது.

ஜெயலலிதா வாழ்க்கையிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

அவர் வாழ்க்கை மூலம் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

திறமையும், துணிச்சலும் இருந்தால்…

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வென்ற முதல் தமிழச்சி வேலுநாச்சியார் வரலாற்றை படமாக்குங்கள்.

மராட்டிய மன்னர்கள், இஸ்லாமிய நவாப்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய 3 எதிரிகளை யுத்த களத்தில் சந்தித்து கொண்டே நாட்டை வளப்படுத்தி, கடைசி காலத்தில் எதிரியின் தனிமை சிறையில் வீர மரணம் அடைந்த ராணி முத்திருவாய் நாச்சியார் வாழ்க்கையை படமாக்குங்கள்.

சாலைகள்தான் வளர்ச்சிக்கான ஆதாரம் என நாடெங்கும் மங்கம்மா சாலைகள் அமைத்த ராணி மங்கம்மாள் கதையை படமாக்குங்கள்.

தமிழக வரலாற்றில் மக்களுக்காக ஆண்டுக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த கே.பி.ஜானகி அம்மாள் கதையை படமாக்குங்கள்.

சுதந்திர இந்தியாவுக்காக நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தபோது. முதல் பெண்ணாக ராணுவ சீருடை அணிந்து களத்தில் நின்ற கேப்டன் லட்சுமி கதையை சினிமாவாக எடுங்கள்.

பெண்ணாக இருந்தாலும் ஆண்களின் உடையிலும், தோற்றத்திலும், தோளில் சோல்னா பையையும் அணிந்து கொண்டு தஞ்சை மிராசுதாரர்களை கதிகலங்க வைத்த மணலூர் மணியம்மை பற்றி படம் எடுங்கள்.

பெண்கள் படிப்பதே பாவம் என்ற சமூக சூழ்நிலையில் மருத்துவம் படித்து முதல் பெண் டாக்டர் ஆன முத்துலட்சுமி ரெட்டி பற்றி படம் எடுங்கள்.

குடிதண்ணீருக்காக ரத்தத்தையே தண்ணீராக கொட்டிய மதுரை லீலாவதி பற்றி படம் எடுங்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஒரு சினிமா திரைக்கதைக்கான அழுத்தமான, ஆழமான விஷயங்கள் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறைக்குச் சொல்ல ஒரு படிப்பினை இருக்கிறது.

மீண்டும் கேட்கிறேன்….

ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக எடுத்து இந்த சமூகத்துக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்.?

மீரான் முகமது

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்