32°C
விளம்பரம்
Advertisement

ரஜினி மக்கள் மன்றத்திற்கென எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள்!

admin சேலம் Published: August 28, 2018 3 நிமிட வாசிப்பு Updated: August 29, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நடிகர்களான ரஜினியும் கமலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் அரசியல் பிரவேசம் குறித்த அறி vவிப்பை வெளியிட்டனர். பின்னர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அதற்கு மாநில நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்த் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து விட்டு தொடர்ந்து நடிப்பதில் பிசியாக இருக்கிறார். இதனால் ரஜினி மக்கள் மன்றப் பணிகள் சற்று பின்னடைவாக இருந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கான புதிய விதிகள் அடங்கிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விதிகள் இதோ:

இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்துக்குத் துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமுதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.

மாவட்ட / ஒன்றிய நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே வழக்கறிஞர் அணியில் சேர முடியும். சட்ட இளநிலை கல்வி பயின்று நீதிமன்றங்களில் பணிபுரியாத வழக்கறிஞர்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்றத்தின் கொடியை நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ, வாகனங்களில் நிரந்தரமாகப் பொருத்தக் கூடாது.

மன்றக் கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும்போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்துக்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களில் / அமைப்புகளில் உறுப்பினராக உள்ளவர்கள் மன்றத்தில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

பொறுப்பில் அமர்த்தப்படுபவர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் இருக்கக் கூடாது.

ஏற்கெனவே மன்ற நிர்வாகப் பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள் / பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. ஒரு குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.

35 வயதுக்கு மேற்பட்டோர் இளைஞர் அணியில் சேர அனுமதி கிடையாது.

பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்

தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது.

மன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக் கூடாது.

தலைமையகத்தின் எழுத்துபூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக் கூடாது.

தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

சட்டவிரோதச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.

கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

தலைமை அலுவலகத்திற்கு முன் அனுமதியின்றி வருவதைத் தவிர்க்க வேண்டும்.

கூட்டங்களில் பூங்கொத்து, பரிசுப் பொருட்கள், சால்வைகள், மாலைகள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக் கூடாது.

சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடும்போது கண்ணியம் காக்க வேண்டும்.

மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்திரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.

சமூக வலைதளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது.

நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர, தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக் கூடாது.

ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்