32°C
விளம்பரம்
Advertisement

முதல்வர் எடப்பாடி ஊழல்? : திமுக வழக்கு!

admin சேலம் Published: August 23, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தமிழக நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்‍கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன் படுத்தியுள்ளார் என்றும் மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு 713.34 கோடியாக உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கான நிதி ஆயிரத்து 515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் எடப்பாடியின் மகனின் மாமனார் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் – மேலும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார் என்றும் மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் 3 ஆயிரத்து 120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை – எனவே, இதுதொடர்பாக எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்