ஒவ்வொருசொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்! – மோடி ரேடியோ பேச்சு
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் வானொலி உரை நிகழ்ச்சி 43-வது மாதமாக இன்று ஒலிபரப்பானது. ஏப்ரல் மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்துள்ள நிலையில் இன்று பிரதமர் என்ன பேசயிருக்கிறார் என்று ஆவலுடன் இருந்தனர். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பான. இந்த நிகழ்ச்சி 43-வது மாதமாக இன்று நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கலந்துகொண்டார்.
இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் 2018–ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் தேதி இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நாளாக நினைவுகூரப்படும். பல இந்தியர்களின் வாழ்வு என்றென்றும் மாறும் என்ற உறுதிப்பாட்டை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலுமே மின்சாரம் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். நாளை புத்த பூர்ணிமா தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு 1998 ஆம் ஆண்டு மே 11-ம் தேதி , இந்தியாவின் மேற்குப் பகுதியில், ராஜஸ்தானில் போக்ரான் நகரில் அணுசக்தி பரிசோதனை நடத்தப்பட்டது. போக்ரான் -2 அணு சோதனை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டது. புத்தர் பூர்ணிமாவின் ஆசிகளுடன் புத்தர் பூர்ணிமா மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. போக்ரான் -2 அணு சோதனை இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அதன் வலிமையை நிரூபித்தது. இந்தியா வரலாற்றில் அதன் இராணுவ சக்தியின் ஒரு மைல் கல்லாக இன்றுவரை பொறிக்கப்பட்டுள்ளது என்றே நாம் சொல்லலாம்.
காமன்வெலத் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அடுத்தடுத்து பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். அவர்கள் தேசிய கொடியோடு பதக்கம் வாங்கியது அற்புதமான தருணம். பெண் விளையாட்டு வீரர்கள் நம் நாட்டின் பெருமை. கடந்த மாதம் உடற்தகுதி குறித்து பேசினேன். அதன் பிறகு எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 4வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார் மேலும் ஃபிட் இந்தியா இயக்கத்தை பற்றி பேசிய பிரதமர், இயக்கத்தின் பெரும் ஆதரவுக்கு மகிழ்ச்சி யடைந்தார். ஃபிட் இந்தியா இயக்கத்தில் பங்களித்ததற்காக, பிரதமர் மோடி புகழ்பெற்ற நடிகர் அக்ஷய் குமாருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உடல் தகுதி குறித்து எனக்கு ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன. இது பெருமை அளிக்கிறது. அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல்நலத்துடன் இருக்க யோகா முக்கியமானது. 4வது சர்வதேச யோகா தினத்தை சிறந்த தினமாக மாற்ற வேண்டும்.சுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகரிப்ப் அதிகம், இந்த சமயத்தில் நீர் வீணாவதை தடுத்து, சேமிக்க வேண்டும். ஆம்.. தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அடுத்த தலைமுறையினருக்காக ஒவ்வொருசொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்து நமது முன்னோர்களிடமிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இது தவிர தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக சராசரியாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 150 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன.”என்று பிரதமர் ர மோடி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசினார்.
மேலும் அவர் தன் உரையில், “எனதருமை நாட்டு மக்களே உங்களிடன் நான் விடுக்கும் வேண்டு கோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் குட் நியூஸ் இந்தியா நிகழ்ச்சி யைப் பாருங்கள், நமது தேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றி வருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல் லாம் அதில் காணக் கிடைக்கின்றன.
சில தினங்கள் முன்பாக, டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப் பற்றி ஒரு விஷயத்தை குட் நியூஸ் இந்தியாவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இளைஞர்கள், டில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப் பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டி ருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப் புதுமையான செயலைத் தொடங்கினார்கள்.
டெல்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு தொடங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர் கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக் காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தரகாண்டின் மலைப்பகுதியின் சில விவசாயிகள், நாடுமுழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக் கிறார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள் உத்தரகாண்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப் படுகின்றன. மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக் காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதை விட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள். என்ன செய்தார்கள்? அவர்கள் தங்கள் விளைபொருட்களிலிருந்து பிஸ்கட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள்.
இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட் களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது. முனார் கிராமத்தில் இவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத் தினார்கள், அங்கே பிஸ்கட்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள். விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை தேசிய ஊரகப்பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கவுசானி வரைகூட கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 லட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடைபட்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார்




