சட்டசபை விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டது நீதிமன்றம்!

சட்டசபை விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டது நீதிமன்றம்!

அண்மையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாசகங்கள் கிடைக்கும் முன்பே தொலைக்காட்சிகள் தீர்ப்பை அலசி முடித்துவிட்டன. அதன் காரணமாக சில் ஆங்கிலச் சொற்கள் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. Rarest of rare cases என்று சொல்லியிருப்பதாக சிலர் தங்கள் கருத்துக்களில் சொன்னார்கள்.ஆனால் ஆங்கிலப் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ள தீர்ப்பின் வாசகங்களில் exceptional circumstances அசாதரண சூழ்நிலைகள் என்ற வார்த்தை கள் காணப்படுகின்றன அதைப் போல “தலையிடமாட்டோம்” என்று சொன்னதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் உயர் நீதி மன்றம் it would not be appropriate for High Court to issue such a direction (அது போன்ற ஓர் ஆணையை உயர் நீதி மன்றம் பிறப்பிப்பது பொருத்தமாக இராது) என்று சொல்லியிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.

மொழி பெயர்ப்பிலும் அவசரத்திலும் நேர்ந்த குழப்பங்கள் என இவற்றைக் கொள்ளலாம். உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் நீதிமன்றமும் சட்டமன்றமும். இரண்டின் பாத்திரங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. (seperation of powers) அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் ஒன்றோடு ஒன்று மோதல் போக்கை மேற்கொள்ளக் கூடாது என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை ( Spirit of the constitution)

சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கை யைப் பெற்றவர் சபாநாயகர். அவரது அதிகாரங்கள் இரண்டு வகைகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒன்று சட்டப் பேரவை விதிகள். மற்றொன்று அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணை. (இது கட்சித்தாவல் தடைச் சட்டம் எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது) கட்சித் தாவல், அதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் ஆகியவற்றில் சபா நாயகர் எடுக்கும் முடிவை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும்.

ஆனால் முடிவு எடுக்காத போது சபாநாயகரின் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத் திற்கு இல்லை. இப்படி இன்ன வகையில் இன்ன காலத்திற்குள் முடிவெடுங்கள் என்று அவருக்கு ஆணையிடவும் அதிகாரமில்லை.

நடந்தது என்ன?

11 பேர் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சபா நாயகரிடம் மனுக் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அவர் நடடவடிக்கை எடுக்க உத்தரவிடுங்கள் என முதலில் மனுச் செய்தது. பின்னர் அதை மாற்றிக் கொண்டு நீங்களே அவர்களைத் தகுதி நீக்கம் செய்யுங்கள் எனக் கோரியது.

அதாவது சபா நாயகரின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளச் சொல்லி சொன்னது

“Passing of such orders would not only amount to judicial overreach but also amount to gross breach of judicial discipline, if not contempt” என்கிறது உயர் நீதி மன்றம்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சட்டமன்றத்தின் எதிர்கட்சி சட்டப் பேரவைத் தலைவரின் அதிகாரத்தை நீதிமன்றத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறது (Surrender of power) ஆனால் சட்ட மன்றத்தின் மாண்பு கருதி அதை ஏற்க நீதிமன்றம் மறுக்கிறது.

இது ஆரோக்கியமான விஷயம். இந்த வழக்கோடு உள்ள அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, தொலை நோக்குப் பார்வையோடு அணுகினால் இதன் முக்கியத்துவம் புரியும்.

நீதித்துறையின ஒழுங்கு -ஜுடிசியல் டிசிப்ளின்- மட்டுமல்ல இந்த முடிவுக்குக் காரணம். உச்ச நீதி மன்றம் அனுமதிக்காத ஒன்றை திமுக கோரியது என்பதும் காரணம்.

” We are constrained to hold that even assuming that this court might embark upon the exercise of taking over the functions of the speaker in exceptional circumstances and
even assuming that those circumstances exist by seeking the relief of an order of this court disqualifying the respondent MLAs,the petitioners are inviting this court to do indirectly what it has been restrained by the supreme court” எனத் தீர்ப்பு தெளிவாகப் பேசுகிறது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதிமன்றத்திடம் சட்டமன்றத் தலைவரின் அதிகாரத்தை (மறைமுகமாக சட்டமன்றத்தின் அதிகாரத்தை) அரசியல் கட்சிகள் சரண்டர் செய்ய முன் வந்த போதும் அதனை ஏற்க மறுத்தது, தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்ட நீதிமன்றத்தைப் பாராட்டுகிறேன்

மாலன் நாராயணன்

error: Content is protected !!