குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By கிருத்திகா தரன்
போன தடவை போட்ட குட் டச்,பேட் டச் பதிவின் (http://www.aanthaireporter.com/?p=3003)தொடர்ச்சி.நீளம் கருதி அதில் நிறைய பாய்ன்ட்கள் சேர்க்கவில்லை.விட்டு போனதை சேர்த்தும், சில பவர் பாய்ன்ட் ஸ்லைட்ஸ் கிடைத்தது.அதையும் ஷேர் செய்து உள்ளேன்.கற்று கொடுக்க மேலும் எளிதாக இருக்கும்.

1.பாதுகாப்பு குழந்தைகளின் உரிமை அதை முதலில் சொல்லி கொடுக்க வேண்டும்.
2.அனைவருக்கும் ஒரு உணர்வு இருக்கும்,மகிழ்ச்சி,சந்தோசம் ,சோகம் எனபது போல ..சில விஷயங்கள் சங்கடமாக இருக்கும்.அதை வெளியில் நம்பிக்கையானவரிடம் கூற வேண்டும்.சங்கடங்களை நம்மிடம் வெளிபடுத்த சந்தர்பங்கள் அளிக்க வேண்டும்.
3.தனிமையான இடத்திற்கு யார் கூப்பிடாலும் போகாமல் இருக்க அறிவுறுத்தவேண்டும்.
4.எது நல்ல தொடுகை ..அரவணைப்பு ,குடுமபதினர் முத்தம் கொடுப்பது போன்றவை .அதுவும் பாதுகாப்பான இடங்களில் மட்டும்.பாதுகாப்பான இடங்கள் எது என்பதை உள்ளாடை விதிகள் மூலம் சொல்லலாம்.
5டாக்டர்கள்,பெற்றோர்கள் போன்றவர்கள் காரணத்தோடு தொடுவது நல்ல தொடுகை.சுத்தம் செய்யவோ அல்லது மருத்துவ உதவி செய்வதும் நல்ல தொடுகை.
5.எது கெட்ட தொடுகை.
யாராவது தொட்டால் சங்கடமாக உணர்வது,
உள்ளாடை பகுதிகளை தொடுவது..
நீண்ட நேரம் கிச்சு,கிச்சு மூட்டுவது ,
வலிகளை ஏற்படுத்துவது ..
மூச்சு திணறும் போன்ற உணர்வுகள் போன்றவை
கெட்ட தொடுகை.இதை கூறுவது மூலம் சிறுவர்கள் மனதில் வித்தியாசத்தை அறிய சொல்லி கொடுக்கலாம்.
6.பேட் டச் ஏற்பட்டால் அது யாருடைய தவறு ? குழ்ந்தையுடையது அல்ல அது தவறு செய்பவருடையது .இதை தெளிவாக கூற வேண்டும்.
7.தவறு செய்தவர்களை காட்டி கொடுக்க வேண்டுமே தவிர பயப்படகூடாது.அவர்களை பற்றி உடனடியாக நம்பிக்கை ஆனவர்களிடம் கூற வேண்டும்.
8.நோ ,இல்லை ,முடியாது என்ற வார்த்தைகளை குழந்தைகள் அழுத்தம்,திருத்தமாக கூற பழக்க படுத்தவேண்டும்.
9.புத்தகங்கள்,கதைகள்,விடியோக்கள் ,பவர் பாய்ன்ட் ஸ்லைட்கள் மூலமாக அவ்வப்பொழுது வயதுக்கு ஏற்ப சொல்லி கொடுக்க வேண்டும்.
10.அவர்களுக்கு சிலரிடம் அன்பாக இருக்க பிடிக்கவில்லை என்றால் வலியுறுத்த கூடாது.அன்பை திணிக்க கூடாது.
11.அவர்கள் உடலின் மேலான ஆளுமையை அவர்களிடம் விடவேண்டும்.அவர்களுக்கு சிலரை அரவணைக்கவோ ,கைகொடுக்கவோ ,பக்கத்தில் அமரவோ பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்த கூடாது.அப்படி செய்தால் உள்ளுணர்வு பாதிக்கப்படும்.
12.அன்பாகவும்,எளிதாக அவர்களுக்கு புரியும் வகையில் பேசி எடுத்துகூறவேண்டும்.அவர்கள் கூறுவதை கோபபடாமல் காது கொடுத்து கேட்க்க வேண்டும்.
13.மகிழ்ச்சியாக உணரும் தருணங்களையும் ,சங்கடமாக உணரும் தருணங்களையும் உணர வைத்து நல்ல,கெட்ட தொடுகைகளை விளக்கலாம் .
14.லிங்க்ஸ் கொடுத்து உள்ளேன்.அதில் அனை த்து விவரங்களும் குழந்தைகளுக்கு புரியும் வண்ணத்தில் இருக்கிறது.போட்டு காட்டி விளக்கினால் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
இனி இது தொடர்பான் சில லிங்குகள்::
http://www.slideshare.net/monikamanchanda/good-touch-bad-touch-ppt-7737665
http://www.slideshare.net/alks_123/good-touch-bad-touch-12717440
http://www.slideshare.net/aquamarine10/good-touch-bad-touch-9173090
http://www.good-touch-bad-touch-asia.org/
இது குறித்து வீடியோ லிங்குகள்::
http://www.youtube.com/watch?v=4KWan3N-yhM
http://www.youtube.com/watch?v=6aH8Rwax09A
கிருத்திகாதரன்


