32°C
விளம்பரம்
Advertisement

பாய் ப்ரண்ட் என்றால் லவ்வர் மட்டுமில்லைங்கோ! – By செல்லிஸ்ரீ!

admin சேலம் Published: July 21, 2017 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நட்புக்களில் ஆண் பெண் நட்பென்பது சுவாரஸ்யம் தான்..ஒரு பெண் தன் சக தோழிகளிடம் கூட பகிர முடியாத விஷயங்களைக் கூட தன் ஆண் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.பல தோழிகள் இருந்தாலும் ஒரு ஆண் நண்பன் இருக்கும் போது அவள் சமூகத்தைக் கூடுதல் தைரியத்துடன் எதிர் கொள்வாள். பாய்ப்ரெண்ட் என்றால் அட லவ்வர்தானே என்றுதான் பலரின் மனம் சராசரியாகதான் நினைக்கும்..ஆனால் படித்ததை,பார்த்ததை,கேட்டதை ,நினைத்ததை பகிர்ந்து கொள்ளவும்,சுக துக்கங்களில் தோள் கொடுக்கவும் , காதல் காமம் இவையின்றி ஒரு மெல்லிய அன்பையும் அக்கறையும் காட்டும் எதிர் பாலின நண்பர்கள் நம்மைச் சுற்றி நிறையவே இருக்கின்றார்கள்..!

ரத்த சொந்தங்களிடம் கிடைக்காத பிணைப்பை நண்பர்களிடம் உனரலாம்..அதும் எதிர் பாலின நட்பு என்றால் இன்னும் கூடுதல் தான் அது இயற்கை..அதைக் கொண்டாடுவதும் அவசியம்..ஆனால் அதைக் கையாளும் பக்குவம் அதை விட அவசியம்..நம்மிடம் புரிதலும் தெளிவும் நம்மைப்போன்ற மனப்பான்மையுடன் sync ஆகிற எதிர் பாலின நண்பர்களிடம் closecசாக இருப்பது சுவாரஸ்யமும், ஒரு வித பாதுகாப்பாகவும் இருக்கும்..ஆனால் பழகுபவர்களின் நிஜ குணம் தெரியாமல் இம்மாதிரியான எதிர் பாலின நட்புக்களிடம் மாட்டிக் கொன்டு ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள்..குறிப்பாக இணையத்தில் ஏற்படும் இம்மாதிரியான எதிர் பாலின நட்புக்களில் அதிக சிக்கல்கலும் பிரச்சனைகளுமே உண்டாகின்றன..

ஒரு ஆணோ பெண்னோஇங்கே அவர்களின் எழுத்து மூலம் தான் பரிச்சயம் ஆகிறார்கள் ,பின்னர் அவர்களது போட்டோக்கள் மூலம்,அவர்கள் பகிரும் பெர்சனல் விஷயங்கள்,குடும்பம் ,வேலை செய்யும் இடம் போன்ற தகவல்கலுடன் அவர்களை ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம்..சிலரிடம் இம்ப்ரெஸ் ஆகி அவர்களுடன் பேச ஆரம்பிக்கிறோம் ஒரு சிலரிடம் இன்னும் ஓவர் ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களிடம் குளோஸ் ஃப்ரென்ட்ஷிப் வைத்துக் கொள்கிறோம்..இப்படி குளோஸ் ப்ரென்ட்ஷிப்பில் இருப்பவர்கள் தினமும் பேசிக் கொள்வார்கள்..போனில் பேசுகிறார்கள், மெசெஞ்சரில் கதைக்கிறார்கள்..தினமும் நடந்ததை கேட்டதை ,குடும்பம் ,குழந்தைகள்,குடுப்ப பிரச்சனைகள்,மியூச்சுவல் ஃப்ரென்ட்ஸ் பத்தி,மியூச்சுவலா ஆகாதவர் பற்றி இப்படி எல்லாம் ஆனால் காதல் இல்லை,காமம் அன்றி மத்தபடி அவர்களிடம் எல்லாவிதமான பகிர்தலும் இருக்கின்றன ..இம்மாதிரி நட்புக்கள் தவறானவை அல்ல..

ஆனால் இம்மாதிரியான நட்பில் இருக்கும் ஆண் பெண் இருவருமே இதே லெவலில் இதே மைன்ட்செட்டில் sync ஆகி விட்டால் இருவருக்குமே எந்த பிரச்சனையும் இல்லை…ஆனால் ஒருவர் just fun and time pass க்காகவும் இன்னொ ருவர் சீரியசாக தனக்கான ஒரே ஃப்ரென்ட் என நினைத்துக் கொண்டும்,அதீத பொசசிவ் ஆக இருக்கும் போது பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன..அதிக பொசசிவால் அடுத்தவரைக் கட்டு படுத்த ஆரம்பிக்கி றார்கள்..இதனால் அடுத்தவர் இவரிடம் இருந்து விலக நினைக்கிறார்..ஆனால் விலக்கப் பட்டவரால் இந்த விலகலை ஈசியாகவும் ,பாசிடிவ்வாகவும் எடுத்துக் கொண்டு கடக்க முடிவதில்லை..விலக்கப்பட்டவர்கள் இந்த விலகலை புறக்கணிப்பை துரோகமாக நினைக்கிறார்கள், ஏமாற்றமாக நினைக்கிறார்கள்..

இன்றைய கால கட்டத்தில் காதலுக்கு மட்டும் அல்ல ..இம்மாதிரி நண்பர்களுக்கும் emotional stability தேவைப் படு கிறது.. இந்த மனநிலை ,யதார்த்தங்களை புரிந்து கொள்ள முடியாமல், இந்த விலகல்களை அவமானமாகக் கருதி அடுத்தவரை பழிவாங்குகிறார்கள்…அவரைப் பற்றி அவதூறு பேசுவார்கள்..அவர் தன்னிடம் நட்பாக பகிர்ந்த விஷயங்களைத் திரித்து புரம் பேசி அவர் கேரக்டரையே கேவலப்படுத்துவார்கள்..இன்னும் மோசமாகி அவர் படங்களைத் தவரான பேஜ்களில் போட்டு அவரை அவமானப்படுத்தி அல்லது அவர் குடும்பத்தாரிடம் அவரைப்பற்றி கோள் மூட்டி அல்லது அவர் வேலை செய்யும் இடங்களில் அவரைப் பற்றி அவதூறு எழுப்பி இப்படி கூட நடந்த கதைகள் கேள்வி பட்டிருக்கிறோம்..இம்மாதிரி நட்புக்களால் என்றுமே மன உளைச்சல்களும் ஆபத்தும்தான் அதிகம்..

ஆக எல்லாருக்கும் குறிப்பாக பெண்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால்..இணைய நட்பை ஈசியாக எடுத்துக் கொண்டு யாரிடமும் குளோசாக பழகி விடாதீர்கள்.முதலில் நீங்கள் உங்களையே சரியாக அனலைஸ் செய்து கொள்ளுங்கள்: உங்களுக்கான நட்பை இணையத்தில் தேடாதீர்கள்..! இங்கே உங்களை attract செய்வபவரை ‘சைலன்டாக’ அனலைஸ் செய்யுங்கள்.. இங்கே உங்களுக்கு மட்டுமான நண்பரை எதிர் பார்க்க முடியாது..இங்கே வருபவர்கள் just fun and time passக்காக மட்டுமே வருகிறார்கள்.. யாரிடமும் எமோஷ்னலாக சரெண்டர் ஆகி விடாதீர்கள்..அது உங்களை நிம்மதியாக இருக்க விடாது..
#தட்சால்

#கொசுறு ..யாராக இருந்தாலும் இங்கே ,,லைக் கமெண்டோடு மட்டும் நிறுத்திக் கொண்டால், commendable friends ஆக நீடூடி வாழலாம்..

செல்லிஸ்ரீ

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்