கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013

கே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013

சென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2013 ம் ஆண்டின் மாநில அளவிலான பிராஜக்ட் கண்காட்சி மற்றும் கலைத்திறன் போட்டிகளுக்கான துவக்க விழா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
sep 5 Bhagyraj-inaugurates-Ignite-Expo-2013-2
தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கே.தேவராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் – நடிகர் கே.பாக்கியராஜ் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் மாணவர்களுக்கான பணித்திட்டம் மற்றும் அறிவுசார் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் செயலாளர் ஏ.ரவிக்குமார், பதிவாளர் டாக்டர் சி.பி.பழனிவேலு, செயல் இயக்குனர் டாக்டர் ஜி.சி.கோதண்டம் , முதல்வர் டாக்டர் கே.பாலசுப்ரமணியன் மற்றும் துணைமுதல்வர் டாக்டர் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்னைட்’எக்ஸ்போ-2013 Ignite’Xpo-2013 குழுத்தலைவர் பேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார். டாக்டர் எம்.ரெங்கராஜ் (கல்வியியல் துறை முதல்வர்) நன்றியுரை ஆற்றினார்.

செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்ற இக்னைட் எக்ஸ்போ -2013 ல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள 100 பள்ளிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 400க்கும் அதிகமான பிராஜக்ட் திட்டங்களைக் கண்டு பயன்பெற்றனர்.

Related Posts