இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

பிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் என்றும் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி திடீரெனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
sep 5 - modi
2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.வின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ. மும்முரம் காட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்ளுக்கு சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதற்குள்ளாக மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி நடக்கிறது. அதற்கு ஏற்றாற் போன்று பல்வேறு மாநிலங்களில் மோடி தனது பிரசாரத்தினை துவக்கி வைத்து உரையாற்றி வருகிறார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் மோடியை பார்த்து,” விரைவிலேயே இந்த நாட்டின் பிரதமராக வந்து நீங்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவீர்களா?” எனக் கேட்டான்.

அதற்கு பதிலளித்த மோடி,” பிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் ” என்றார்.

வரவிருக்கும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், 2017 ஆம் ஆண்டு வரை தாம் குஜராத் முதலமைச்சர் பதவியில் நீடிக்கப்போவதாக கூறிய மோடியின் பதில் மோடியின் இந்த அறிவிப்பு பா.ஜனதா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Will serve Gujarat till 2017: Narendra Modi on PM ambition

********************************************************************
nteracting with students on the occasion of Teachers’ Day, Gujarat Chief Minister Narendra Modi said that he will serve the state till 2017 and that he has no ambition to become anything. Responding to a student’s query whether he will come and talk to them after ‘he becomes PM next year’, Modi said, “I have to serve you till 2017 & I am doing this. The people of Gujarat have chosen me to serve till 2017 and that is my priority.” “I have no intention of becoming anything. I want to serve people. I don’t dream of becoming somebody but dream of doing something,” said Modi at a Teacher’s Day function in Gandhinagar.