ஆர்.கே. நகர் ; தேர்தல் ரத்து?

ஆர்.கே. நகர் ; தேர்தல் ரத்து?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது. அதிமுக அம்மா கட்சி சார்பில் போட் டியிடும் தினகரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கப் படுவதாக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.

rk nagar apr 8

முறைகேடு தொடர்பான புகார் கள் அதிகரித்ததால், தேர்தலை கண்காணிக்கவும், செலவினங்கள் தொடர்பாக உத்தரவுகளை வழங் கவும், தேர்தல் ஆணைய செலவினப் பிரிவு இயக்குநர் விக்ரம் பாத்ரா சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சென்னை வந்த அவர், பிற்பகலே ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று, பார்வையா ளர்கள், காவல்துறை அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சோதனை

இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் ஆதரவாளரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் வீடு, எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள அவரது அறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் ரூ.2.2 கோடி, எம்எல்ஏ விடுதி அறையில் ரூ.1.80 லட்சம் கைப்பற்றப்பட்டது.

எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விஜயபாஸ்கர் கடந்த சில தினங்களுக்கு முன் தங்கியுள்ளார். அந்த விடுதி அறையில் இருந்தும் பரிசு டோக்கன் உள்ளிட்ட பல்வேறு ஆவணங் களை வருமான வரித்துறை யினர் கைப்பற்றினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் தேர்தலுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல்வேறு கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின.

ஆலோசனை

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பகல் 12.45 மணிக்கு, சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் கரன் சின்கா, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வாக்குப் பதிவு நாள் வரை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், விக்ரம் பாத்ரா தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு கட்சிகள் அளித்த புகார்கள் மீதும் பண விநியோகம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கை, வீடியோ ஆதாரங்களும் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் ரத்தாகுமா?

பணப் பட்டுவாடா, அதிமுகவின் இருதரப்புக்கும் இடையிலான மோதல், வருமான வரித்துறை சோதனை இவற்றின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரி வருகிறது. திமுக நடத்தியே ஆக வேண்டும் தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் அணியினர் ஆணையம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்படுமா? தள்ளி வைக்கப்படுமா? அல்லது வேட்பாளர் தகுதி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிடுமா? என்பது விரைவில் தெரியவரும்.

Related Posts