பாலியல் அடிமைகளுக்கு ரூ.22 கோடியில் உள்ளாடைகள் ;வடகொரிய அதிபர் பகீர் போக்கு!

பாலியல் அடிமைகளுக்கு ரூ.22 கோடியில் உள்ளாடைகள் ;வடகொரிய அதிபர் பகீர் போக்கு!

வடகொரியாவைப் பொறுத்தவரைக்கும் அதிபர்கள் என்றால் சாதாரண அதிபர்கள் இல்லை. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறும் என்றெல்லாம் எதுவும் இல்லை. சாகும் வரைக்கும் எதிர்த்துக் கேட்க ஆளில்லாத சகல அதிகாரங்களும் படைத்த கடவுள் மாதிரி. ஒரே ஒரு இம்சை உண்டு- அது அமெரிக்கா. அவனைச் சமாளிக்க அவ்வப்போது அணுகுண்டு வெடித்துக் காட்ட வேண்டும். ‘எம் பக்கத்தில் வந்தால் சொய்ங்ன்னு உன் மேல வீசுற அளவுக்கு வசதி இருக்கு’ என்று மிரட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். அதைத்தான் பரம்பரை பரம்பரையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையில் வட கொரியா குடிமக்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் தன்னுடைய உல்லாசத்திற்காக அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

koreya apr 7

அதிலும் சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக காட்டப்படும் வட கொரியா அதிபரான கிம் யோங் அன் தன்னுடைய தனிப்பட்ட உல்லாசத்திற்காக பணத்தை தண்ணீராக செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அதிபரை உற்சாகப்படுத்த 13 வயது நிரம்பிய சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கற்புடன் இருக்கிறார்களா? என மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.பின்னர், மகிழ்ச்சி அணியில் பாலியல் அடிமைகளாக சேர்க்கப்படுமவார்கள். அதிபர் விரும்பும்போது அவரை அவர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இச்சிறுமிகள் அணிவதற்காக சுமார் 2.7 மில்லியன் பவுண்டில் ( ரூ.22 கோடியில்) உள்ளாடைகளை அதிபர் சீனா நாட்டில் இருந்து வரவழைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், ஜெர்மன் நாட்டில் இருந்து சாம்பெய்ன் மது மற்றும் பீர்களை வரவழைத்ததுள்ளது மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து உல்லாசமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
குடிமக்களுக்காக பிற நாடுகள் செலவிட்டு வரும் நிலையில், வட கொரியா அதிபர் தனது மூதாதையர்களின் சிலைகளை நாடு முழுவதும் நிறுவுவதற்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட்களை செலவிட்டுள்ளார். முன்னரே குறிப்பிட்டது போல வட கொரியா முழுவதும் கோடிக்கணக்கான குடிமக்கள் வறுமையில் வாடி வருவதாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளதை கண்டுக்கொள்ளாத இவரது உல்லாச நடவடிக்கைகள் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!