நாடாளுமன்ற வளாகத்தில் ‘டங்கல்’ திரைப்படம்!
அமீர்கான் நடித்த டங்கல் திரைப்படம் நாளை-வியாழக்கிழமை- நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில் திரையிடப்படுகிறது. எம்.பி.க்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த இந்தி திரைப்படம் டங்கல். மல்யுத்த பயிற்சியாளர் ஒருவரின் வாழ்க்கையை மிகச்சிறப்பாக பதிவு செய்த படம் இதுவாகும். அமீர்கான் தன் இரு மகள்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகள் ஆக்கி போட்டியில் வெற்றி பெறச் செய்வது போல் இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கும். பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்.
எனவே இந்தப் படத்தை அனைத்து எம்.பி.க்களும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தார். அதன்படி நாளை இந்தப் படம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில் திரையிடப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு காட்சி தொடங்குகிறது.இதற்கு முன்பு கடந்த ஆண்டு சாணக்யா திரைப்படம் இதுபோல் எம்பிக்களுக்காக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது


