32°C
விளம்பரம்
Advertisement

உலகப் புகழ் கவிஞர், வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி உமர்கய்யாம்

admin சேலம் Published: December 4, 2016 4 நிமிட வாசிப்பு மறக்க முடியுமா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



உலகப் புகழ்பெற்ற கவிஞர். அதுமட்டுமல்ல… வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி என பல முகங்கள் கொண்டவர் உமர் கய்யாம். 1048ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (இன்றைய ஈரான்) பிறந்தார். இவரது குடும்பம் கூடாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. உமர் கய்யாம் சில ஆண்டுகள் வடக்கு ஆப்கானிஸ்தானில், பால்க் நகரில் வசித்தார். சேக் முகமது மன்சூர் என்பவரிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிறகு குராசன் பகுதியில் இமாம் மோவாபாக் நிஷாபுரியிடம் தனது கல்வி அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். அவரிடம் தத்துவமும் பயின்றார். மிகச் சிறந்த கணிதவியலாளரான உமர், எண் கணிதம், இசை, இயற் கணிதம் குறித்த புத்தகங்களை தனது 25 வயதுக்குள் எழுதினார்.

omar dec 4

உஸ்பெக்கிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரில் 1070ல் குடியேறினார். இயற்கணிதப் புதிர்களுக்கான செயல் விளக்கம் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அதில் முப்படிச் சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான வடிவியல் முறையை வகுத்தார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியையும் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல், பெர்ஷியாவில் பாட நூலாகப் பயன்படுத்தப்பட்டது.

நாள்காட்டி சீர்திருத்தத்துக்காக வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள சுல்தான் மாலிக் ஷா இவரை அழைத்தார். இதற்காக எஸ்ஃபகான் என்ற இடத்தில் ஒரு கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டது. நாள்காட்டியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஜலாலி (Jalali) என்ற புதிய நாள்காட்டி உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் என்பது 365.24219858156 நாட்கள் என்று துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார் உமர் கய்யாம்.

தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக் கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்கு வரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். கடவுள், ரோஜாக்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம் பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் நவீன கருத்துகளும் நிரம்பி வழிந்தன. நாட்டில் 1092ல் உருவான புரட்சியில் பல தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். சுல்தான் மாலிக்கும் இறந்தார். ஆட்சி கை மாறியது. வானியல் ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டது. அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவரை நாத்திகவாதி என்று கூறி புரட்சியாளர்கள் இவரையும் தாக்கினார்கள். இதன்பிறகு உமர் கய்யாம் கவிதைகள் படைப்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இவர் எழுதிய இரண்டு அத்தியாயங்கள் கொண்ட நூலின் கையெழுத்துப் படி ஈரானில் உள்ள டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இன்றும் உள்ளது.

சாம்பிளுக்கு இக்கவிஞரின் மொழிபெயர்ப்புகளில் மிகச் சில இதோ;

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

விழித்தெழு ! காலைப் பொழுது கல்வீசி

விரட்டும் தாரகை யாவும் இரவு வானத்தில்.

ஆ ! கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்

சுல்தான் கோட்டையை சுருக்குக் கதிரால் !

1. AWAKE! for Morning in the Bowl of Night
Has flung the Stone that puts the Stars to Flight:
And Lo! the Hunter of the East has caught
The Sultan’s Turret in a Noose of Light.

பொழுதின் இடது கை வான் தொடக் கனவெழும்

விழுந்ததென் காதில் மதுக்கடைக் கூக்குரல்.

“எழுவீர் இளைஞர்காள் ! நிரப்புவீர் கிண்ணம்

உமது உயிரின் மது உடலில் வற்றும் முன்னம்”.

2. Dreaming when Dawn’s Left Hand was in the Sky
I heard a voice within the Tavern cry,
“Awake, my Little ones, and fill the Cup
Before Life’s Liquor in its Cup be dry.”

சேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்

சேர்ந்து கத்தினர் – “திறடா கதவை !

உமதறிவு அற்பம், வசிக்கப் போவது நாங்கள்

ஒருதரம் போனவர் மறுமுறை மீளார்.”

3. And, as the Cock crew, those who stood before

The Tavern shouted — “Open then the Door !

You know how little while we have to stay,

And, once departed, may return no more.

வா ! என் கிண்ணம் நிரப்பு ! வசந்தக் கனலில்

வருத்தம் எனும் குளிர் மேலங்கி பறந்தோடும்;

காலப் பறவைக்கு குறுகிப் போனது பாதை,

ஆயினும் பறக்கும் பறவை சிறகடித்த படியே !

Come, fill the Cup, and in the Fire of Spring
The Winter Garment of Repentance fling:
The Bird of Time has but a little way
To fly — and Lo! the Bird is on the Wing.

மடமை அல்லவா ! சிலந்தி போல் பின்னி

நிகழ் கால வாழ்வு நூலறுத்து வெல்வதா,

நாமிழுக்கும் காற்றை நாமே வெளி யேற்றி

நமக்கே மூச்சு விடத் தெரியாத போது !

Were it not Folly, Spider-like to spin
The Thread of present Life away to win —
What? for ourselves, who know not if we shall
Breathe out the very Breath we now breathe in!

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்