தியேட்டரில் தேசிய கீதம் இசைக்காததால் படம் பார்க்காமல் திரும்பிய ஹாக்கி வீராங்கனை!

தியேட்டரில் தேசிய கீதம் இசைக்காததால் படம் பார்க்காமல் திரும்பிய  ஹாக்கி வீராங்கனை!

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா திரையிடுவதற்கு முன் நம் நாட்டின் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்திய பெண்கள்  ஹாக்கி அணியின் தலைவர் வந்தனா கட்டாரியா ஆஸ்திரேலியாவில் ஹாக்கி போட்டிகளில் விளையாடி விட்டு புதன் கிழமைதான் தாயாகம் திரும்பினார். ஹரித்துவாரில் உள்ள ஒரு பிரபல சினி பிளக்ஸ் தியேட்டருக்கு ஷாருகான் நடித்த டியர் ஜிந்தகி படம் பார்க்க சென்றார்.

nationala antham dec 2

ஆனால் அந்த தியேட்டரில் தேசிய கீதம் இசைக்காமல் படம் திரையிடபட்டு உள்ளது இது குறித்து வந்தனா கட்டாரியா தியேட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து தங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தியேட்டரின் நிர்வாகி சஞ்சீவ் குமார் கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிருப்தி அடைந்த வந்தனா,கூறும் போது தேசிய கீதத்தையும், தேசிய கொடியையும் மதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரவேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கூறினார்.தேசிய சின்னங்களுக்கு மரியாதை செலுத்த முடியாத நாம் இந்தியர் என்று சொல்லி கொள்வதற்கு தகுதி இல்லை.என கூறி சினிமாவை பார்க்காமல் அந்த தியேட்டரை விட்டு வெளியேறினார்.இது மும்பை நாளிதழ்களில் ஹாட் நியூஸாகி விட்டது.