33 நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்த நா.முத்துகுமார்!

33  நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்த நா.முத்துகுமார்!

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

unnamed

ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா

இசை – வே.கிஷோர் குமார்

படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார்)

கலை – ராம் / நடனம் – சங்கர்

பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.

தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த்

தயாரிப்பு – மனோ உதயகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..”மேல்நாட்டு மருமகன் “செக்ஸ் வன்முறை, என்று இல்லாத குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் – ஆண்ட் ரியன் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம். இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்..

அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன் . அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க பிளீஸ் என்றார். நீங்கதான் எழுதனும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர் . அவரது காரில் என்னை அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் பாட்டெழுதி கொடுத்துவிட்டார் . ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நடப்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு.

“யாரோ யார் இவளோ “

சந்தோஷத்தின் பேர் இவளா “

என்று அருவியாய் வந்த அவரது எழுத்தாற்றல் மிகப்பெரியது.

அது மட்டுமல்ல படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மைக்கு இந்த படக்குழு நன்றி சொல்லிக் கொள்கிறது ”என்றார் இயக்குனர் .எம்.எஸ்.எஸ்

Related Posts