32°C
விளம்பரம்

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

admin Published: October 22, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ திரைப்படத்தின் மூலம் ஆரம்பிக்கிறார்.

இதில் வடிவேலு நாயகனாக நடிக்கிறார்.அதிலும் தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் என இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். யுவராஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து வடிவேலு விடம் கேட்டபோது “இப்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் மடடும் நடித்து வருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் 65 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையில் நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்புகிறேன்” என்றார்.

உடனடி செய்திகள்