மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் !

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு  கேபினட்  ஒப்புதல் !

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள விவரங்கள் வருமாறு:

* குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம்

* வாகனத்தால் மோதினால் ரூ.2 லட்சம் இழப்பீடு

edit-may-6

* சாலை விபத்தால் இறந்தவருக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு.

* காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம், 3 ஆண்டு சிறை.

* ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் ரூ.2,000 அபராதம், 3 மாதத்துக்கு லைசென்ஸ் ரத்து.

* சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து போன்றவற்றுக்கு அவர்களின் காப்பாளர் அல்லது வாகன உரிமையாளரே பொறுப்பாவார். அவர்களுக்கு தண்டனை வழங்கவும், சம்பந்தப்பட்ட வாகன பதிவு ரத்து செய்யவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘சாலை பாதுகாப்புக்கான மிக முக்கிய மைல்கல்லாக இந்த மசோதா அமைந்துள்ளது. இதனால் சாலை பாதுகாப்பும், பல லட்சம் அப்பாவி உயிர்கள் காக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. 18 மாநில போக்குவரத்து அமைச்சர்கள் பரிந்துரையின்படி இந்த மசோதாவில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அபராதம் விதிப்பது உட்பட பல்வேறு ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இந்த சட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள க்ளிக்

Related Posts