இன்னாது,, இண்டர்நேஷல் யோகா டே அன்னிக்கு கவர்மெண்ட் ஹாலிடேயா
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்பேரில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது. அன்றைய தினம், நாடு முழுவதும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன. வருகிற 21-ந் தேதி, இரண்டாவது ஆண்டாக யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மத்திய அரசுத் துறை களில் உள்ள பயிற்சியாளர்களுக்கு பிரபல யோகா அமைப்பு கள் பயிற்சி அளித்து வருகின்றன.

இதுதொடர்பாக அமைச்சரவை செயலாளர்களுக்கு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், “சர்வ தேச யோகா தினத்தையொடடி, விரிவானா யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பிரம்மாண்ட யோகா நிகழ்வில் யோகா நிபுணர் களின் உரையாடல்கள், சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன. பல்வேறு யோகா அமைப்புகள், அரசின் முயற்சி களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில், யோகா தின கொண்டாட்டத்தையொட்டி பயிற்சி யாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பிற நிபுணத்துவ ஆலோசனை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளன” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.யோகா தினத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை பிரம் மாண்டமான பொது யோகா நிகழ்ச்சி மாநிலம், மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதையொட்டி, தேவை யான நடவடிக்கைகளை மேற் கொள்ளும்படி அனைத்து அமைச்சரவை செயலாளர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே யோகா பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்வதும், ‘ஓம்’ மந்திரத்தை உச்சரிப்பதும் தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சில மத அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்ததால், கடந்த ஆண்டு இவை சேர்க்கப்படவில்லை. அதே போல் , இந்த ஆண்டும் சூரிய நமஸ்காரம் கிடையாது என்று யோகா தின கொண்டாட்டத்துக்கு பொறுப்பேற்றுள்ள மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபத் நாயக் நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும், “கடந்த ஆண்டும் சூரிய நமஸ்காரத்தை நாங்கள் சேர்க்கவில்லை. அது சிக்கலான பயிற்சி. புதிதாக செய்பவர்களால் செய்ய இயலாது. ஆகவே, இந்த ஆண்டும் அது கிடையாது. ‘ஓம்’ மந்திரத்தை பொறுத்தவரை, அதை உச்சரிக்காமல் யோகா பயிற்சி நிறைவு பெறாது. இருப்பினும், அதை உச்சரிப்பது கட்டாயம் அல்ல. யோகா தினத்தன்று விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால், அதுபற்றி பிரதமரிடம் பேசுவேன்” என்றார்


