அய்யே, கிஃப்டா குடுத்த கோஹினூர் வைரத்தைத் திருப்பிக் கேக்கறதா? அஸ்க்கு.. புஸ்க்கு! – மத்திய அரசு தகவல்
கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது; அது இந்தியாவில் இருந்து திருடப்படவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் அதனால் அதைத் திருப்பிக் கேடக சாத்தியமில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.1,300 கோடி மதிப்புள்ள கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென்று அகில இந்திய மனித உரிமைகள், சமூக நீதி முன்னணி என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டிதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் இது தொடர்பாக அளித்த விளக்கத்தை அரசுத் தரப்பு வழக்குரைஞர் ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.அப்போது, ”105 கேரட் கோஹினூர் வைரத்தை மகாராஜா ரஞ்சித் சிங் கிஃப்டா கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அளித்தார். அது இந்தியாவில் இருந்து திருடப்படவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவோ இல்லை என்றார்.
எனினும், 1849-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில பிரிட்டன் கவர்னராக இருந்த டல்ஹௌசி பிரபு, மகாராஜா ரஞ்சித் சிங்கை கட்டாயப்பட்டுத்தி, கோஹினூர் வைரத்தை விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளிக்கச் செய்தார் என்று கூறப்படுகிறது.இதையடுத்து, இது தொடர்பான 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் மிகவும் விலைமதிப்புள்ள வைரங்களில் கோஹினூர் வைரம் முதன்மையானது. இது தவிர இந்தியாவில் இருந்து ஏராளமான விலை மதிப்புமிக்க பொருள்கள் காலனி ஆதிக்கத்தின்போது பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தையும் மீட்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே அமைச்சர்: கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வர தங்கள் அமைச்சகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். தில்லியில் திங்கள்கிழமை இது தொடர்பாக அவர் மேலும், “ ஜாங்கரீதியில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மத்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுக்கும். எனவே கலாசாரத் துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நமது தொன்மை பொருள்கள் வேறு நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை மீட்க கலாசாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.


