32°C
விளம்பரம்

சென்ட்ரல் கவர்மென்ட் அபீசருங்க ஹிந்திலேதான் எழுதோணும் ! பேசோணுமாம்

admin சேலம் Published: January 24, 2016 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மத்திய அரசு எப்போதெல்லாம் “ஹிந்தி மொழி திணிப்புக்கு முயற்சி செய்யப்பட்டதோ, அப்போதெ ல் லாம் தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.1937-40: தாளமுத்து, நடராஜன் ஆகிய இரண்டு தமிழ் ஆர்வலர்கள் “ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் காவல்துறையினர் தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் இருவருமே,”ஹிந்தி எதிர்ப்புப் பேராட்டத்தின் முதல் தியாகிகள் ஆகின்றனர்.1963- நவம்பர்: சி.என்.அண்ணாதுரை தலைமையில் திமுக சார்பில் “ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.1964- ஜனவரி: திருச்சியைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி “ஹிந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். இன்றளவும் இந்த நாளை திமுக, இந்தி எதிர்ப்பு தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.
edit jan 24
1965: “ஹிந்தி மொழி நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு பெருமளவில் போராட்டம் வெடித்தது.

* மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் போராட்டம் வலுவடைந்தன. மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

* இரண்டு போலீஸார் உள்பட 70 பேர் பலியாக அரசு நெருக்கடிக்கு பணிந்தது.

* லால் பகதூர் சாஸ்திரி மாற்று மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் என அறிவித்தார்

இந்நிலையில் அரசுத் துறைகளுக்கு இடையே நடைபெறும் கடிதத் தொடர்புகளை தேசிய மொழியான “ஹிந்தி’ மூலம் மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் அலுவல் மொழித் துறை மூலம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் : ” மத்திய அரசு அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் தொடர்பான கடிதங்களை ஹிந்தி மொழியில்தான் எழுத வேண்டும் என்பது அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள பொறுப்பாகும். இயன்ற வரை எளிமையான ஹிந்தி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கணிப் பொறிகளில் “ஒலி தட்டச்சு’ (ஆடியோ டைப்பிங்) மென்பொருளை நிறுவி அதன் மூலம் ஹிந்தி மொழியில் பேசலாம்.

இது போன்ற நடவடிக்கைகளை உயரதிகாரிகள் மேற்கொள்வதால், அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் இளநிலை அதிகாரிகளும் ஹிந்தி மொழியை பயன்படுத்த ஊக்கம் பெறுவர். எதிர்காலத்தில் ஹிந்தி மொழி தெரிந்த இளநிலை அதிகாரிகளை நம்பிக் கொண்டு கடிதம் எழுதக் காத்திருக்கும் நிலையை உயரதிகாரிகள் தவிர்க்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் கடந்த 8-ஆம் தேதி அலுவல் மொழி துறை சார்பில் 20 அமைச்சகங் களின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில், ஹிந்தி மொழியை 100 சதவீதம் பயன்படுத்தும் துறை ஊழியர்கள் உள்ள துறைகள் கண்டறியப்பட்டன. இருப்பினும், அந்தத் துறைகளில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே அலுவல் பயன்பாட்டுக்கு ஹிந்தி மொழியைப் பயன் படுத்துவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்தே அனைத்து துறைகளுக்கும் மேற்கண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்