லலித் மோடிக்கு வாழ்நாள் தடை : பிசிசிஐ முடிவை எதிர்த்து வழக்கு!!!

லலித் மோடிக்கு வாழ்நாள் தடை : பிசிசிஐ முடிவை எதிர்த்து வழக்கு!!!

சென்னையில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் கூடிய பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், ஐபிஎல் தலைவராக இருந்த போது லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவர் பிசிசிஐயில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் நிர்வாகப் பணிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடு செய்ததாக இந்தியன் பிரிமியர் லீக் முன்னாள் தலைவர் லலித் மோடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.பி.சி.சி.ஐ.-யின் இந்த முடிவை எதிர்த்து லலித் மோடி கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
sep 25 - modi
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி உருவாக காரணமாக இருந்தவர் லலித் மோடி. 2008–ம் ஆண்டு முதல் 2010–ம் ஆண்டு வரை இவர் ஐ.பி.எல். தலைவராக இருந்தார். லலித் மோடி தலைவராக இருந்தபோது பல்வேறு நிதிமுறை கேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிர்வாகம் மற்றும் பல்வேறு நிதி வகையிலும் முறைகேடு, ஐ.பி.எல். அணிகளின் ஏலத்தில் தலையீடு, கொச்சி அணிக்கு எதிரான செயல்பாடு, கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் இண்டர்நெட் உரிமம் வழங்கியது, ஐ.பி.எல். போட்டி அமைப்பை உருவாக்க முயன்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

லலித்மோடி மீது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அருண் ஜேட்லி, சிராயு அமின், ஜோதி ரத்யா சிந்தியா ஆகியோர் குழுவை இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பயந்து லலித்மோடி தலைமறைவானார். அவர் தற்போது லண்டனில் உள்ளார். அவ்வப்போது கிரிக்கெட் வாரியத்தை டுவிட்டர் இணைய தளம் மூலம் விமர்சித்து வருகிறார்.

லலித்மோடி மீதான முறைகேடு குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி சமீபத்தில் கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கையை சமர்பித்தது. இந்த விசாரணை அறிக்கை 134 பக்கங்களை கொண்டது. இதில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, சென்னையில் நடைபெற உள்ள பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் லலித் மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் லலித் மோடி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு கூட்டம் நடத்துவது பி.சி.சி.ஐ.-யின் உள்விவகாரம் என்று கூறி, தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று பிற்பகல் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. லலித் மோடி மீதான நிதி முறைகேடு மற்றும் இது தொடர்பாக ஒழுங்கு நடவடிககை குழு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால், மோடியை பி.சி.சி.ஐ.யில் இருந்து நீக்கவும், அவருக்கு ஆயுள் தடை விதிக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பி.சி.சி.ஐ.-யின் இந்த முடிவை எதிர்த்து லலித் மோடி கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

BCCI imposes life ban on former IPL commissioner Lalit Modi
********************************************************************
A pariah in Indian cricket for three years now, former IPL commissioner Lalit Modi was on Wednesday slapped with a life ban by the BCCI after its disciplinary committee found him guilty on eight charges of “indiscipline and misconduct”.