32°C
விளம்பரம்
Advertisement

சிங்காரம்- விமர்சனம்!

admin சேலம் Published: October 31, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



தமிழ்நாட்டில் வசிக்கும் மிகப் பழமையான பழங்குடிச் சமூகங்களில் ഒന്നான நரிக்குறவர்கள் (குருவிக்காரர்கள்), தங்கள் பாரம்பரியக் கலையான ஊசி பாசி மணி செய்தல், வேட்டையாடுதல் மற்றும் சிறு வணிகங்கள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைச் சமாளித்து வரும் நாடோடிப் பண்பாடு கொண்ட சமூகத்தினர் ஆவர். இவர்களின் மக்கள் தொகை மாநிலம் முழுவதிலும் பரவலாக சுமார் 30,000 முதல் 40,000 வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் (மு. கருணாநிதி & ஜே. ஜெயலலிதா): இச்சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரியதை ஏற்று 2022-2023 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் மத்திய அரசால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகம் அதிகாரப்பூர்வமாகப் பழங்குடியினர் (ST – Scheduled Tribes) பட்டியலில் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப் பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசமைப்பு உரிமைகளைப் பெறுவதில் நிலவி வந்த தடைகள் இம்மாற்றத்தின் மூலம் குறையத் தொடங்கியிருந்தாலும், நிரந்தர இருப்பிடம் இன்மை, சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வறுமை மற்றும் சமூக விளிம்புநிலை ஆகியவை இன்னமும் இச்சமூகத்தினரின் அன்றாட வாழ்வில் முதன்மை சவால்களாகவே இருந்து வருகின்றன. அந்த அவல நிலையை மையமாக வைத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டங்களை பேச முற்பட்டிருக்கும் திரைப்படமே ‘சிங்காரம்’.

கதையும் களமும்:

1990-களின் காலக்கட்டத்தில் நடைபெறும் இந்தக் கதையில், பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்திற்கு தற்காலிகமாக இடம்பெயரும் ஒரு நரிக்குறவர் கூட்டத்தின் வாழ்வியல் சூழலே மையக்களமாக அமைகிறது. ஊர் தலைவரின் ஆதரவால் ஓரிடத்தில் கூரை அமைத்து தங்கும் இவர்கள், பாசிமணி விற்கும் தொழில் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.அடிப்படை முகவரிச் சான்று இல்லாததால் ரேஷன் கார்டு கூட பெற முடியாமல் தவிக்கும் கதாநாயகன் குடும்பத்திற்கு, எதிர்பாராதவிதமாக லாட்டரி சீட்டு மூலம் பெரிய தொகை பரிசாகக் கிடைக்கிறது. இருப்பினும், இருப்பிடச் சான்று இல்லாத காரணத்தால் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் பெற முடியாமல் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அரசியல் பின்னணிகளுமே படத்தின்  திரைக்கதை நகர்வாகும்.

நடிப்பு

குழுவின் பெரிசாக அப்பாவாக நடித்த எம்.எஸ். பாஸ்கர், ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் அந்தச் சமூகத்தின் கஷ்டங்களை அருமையாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்கிறார்.கோலிவுட்டின் செப் பிராப்பர்ட்டி யோகி பாபு டைரக்டர் சொன்னதை செய்து ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். மேலும், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரின் இயல்பான பங்களிப்பும், ஊர் தலைவராக நடித்த வேல ராமமூர்த்தியின் அழுத்தமான நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கின்றன. மட்டுமின்றி படவா கோபி, செண்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் ஆஜராகி உள்ளார்கள்

டெக்னிஷியன்கள் பங்களிப்பு: 

90-களின் சூழலையும், நரிக்குறவர் மக்களின் உடை, பாசிமணி அணிகலன்கள், இருப்பிட அமைப்பு என அனைத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைப்பு செய்து பாராட்டுகளைப் பெறுகிறார் கலை இயக்குனர்.

சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசையும், விவேகாவின் பாடல்களும் கதையின் ஓட்டத்திற்குத் தேவையான உணர்வைக் கூட்டுகின்றன.

கேமராமேன்கள் பிரசன்ன குமார் மற்றும் லாரன்ஸ் கிஷோர் ஒளிப்பதிவு ஏனோ ஒட்டவில்லை

முத்தாய்ப்பாகச் சொல்வதானால் கல்வியும் அரசுப் பணியும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று அரசியல் அதிகாரமும் மிக அவசியம் என்பதை உரக்கச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆனால் வெறும் தரவுகளை அதுவும் போதிய திரைக் கதையை பின்னாமல் வழங்கி உதட்டை பிதுக்க வைத்து விட்டார்கள்

ரேட்டிங்: 2.25 / 5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்