32°C
விளம்பரம்
Advertisement

கோலாகலமாக நடந்த ‘ஆல் பாஸ்’ இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

admin Published: August 16, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மைதீன் இயக்கத்தில், வடசென்னை மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ படப்புகழ் துஷ்யந்த் கதாநாயகனாகவும், ‘லியோ’ படப்புகழ் ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

திரை பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான செய்திகளின் தொகுப்பு:

தயாரிப்பாளர் மோகனா. ஆர்:

“கேமரா முன்னாடி நடிப்பது எளிது, ஆனால் மேடையில் பேசுவது பதற்றமாக இருக்கிறது. எங்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும்.”

இயக்குநர் மைதீன்:

“கதை சொல்லச் சென்றபோது, நடிகர் ஜெயப்பிரகாஷ் சார் கதையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, சம்பளம் ஒரு பொருட்டே இல்லை என்று ‘அழகர்’ கதாபாத்திரத்தில் அவரே நடிக்க முன்வந்தது பெரிய நெகிழ்ச்சி. ஜேம்ஸ் வசந்தன் சார் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக இசை அமைக்க ஒப்புக்கொண்டார். உதவி இயக்குநர்களின் உழைப்பும் தேடலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்படம் வடசென்னையை ஒரு புதிய கோணத்தில் காட்டும்.”

இயக்குநர் விக்ரமன்:

“ஜெயப்பிரகாஷுக்கும் எனக்கும் 30 வருட பந்தம் உள்ளது. அவரை தயாரிப்பாளராக மாற்றியதே நான்தான். அவருடைய மகன் துஷ்யந்த் இப்படத்தில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சி. டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.”

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்:

“டிரெய்லரும் பாடல்களும் பார்க்க அருமையாக உள்ளன. ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்த் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி ஜனனியும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ஜேம்ஸ் வசந்தனின் இசை வழக்கம்போல கலக்குகிறது.”

நடிகர் மன்சூர் அலிகான்:

“சினிமாவில் உழைக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உரிய மரியாதையுடன் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். திரையுலகில் உழைக்கும் கலைஞர்களைக் தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் தனஞ்செயன்:

“வடசென்னை என்றாலே வன்முறை, அடிதடி என்றே காட்டப்பட்டு வந்த பிம்பத்தை உடைத்து, அங்கு வாழும் எளிய மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறுகலான தெருக்களில் 45 நாட்கள் சவாலாகப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். ஜேம்ஸ் வசந்தனின் இசை படத்திற்குப் பெரிய பலம்.”

நாயகி ஜனனி:

“இயக்குநர் மைதீன் கதை சொன்ன விதமும், வடசென்னையை அணுகிய லொகேஷன் முறையும் என்னை மிகவும் கவர்ந்தது. பெரிய ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.”

நாயகன் துஷ்யந்த்:

“என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் இது. எனது தந்தையுடன் (ஜெயப்பிரகாஷ்) இணைந்து நடித்தது மகிழ்ச்சி. எனது முதல் படமான ‘ஈசன்’ படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் சாருடன் மீண்டும் இணைவது ஸ்பெஷலானது. வடசென்னையை எடிட்டரும் இயக்குநரும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காட்டியுள்ளனர்.”

நடிகர் ஜெயப்பிரகாஷ்:

“இயக்குநர் மைதீன் முதலில் சொன்ன கதையை டப்பிங் வரை அப்படியே மாறாமல் இயல்பாக எடுத்திருக்கிறார். சமையல்காரர், பெயிண்டர், சைக்கிள் கடைக்காரர் என மூன்று எளிய குடும்பங்களின் கதையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. வடசென்னையின் நிஜமான அன்பையும் வாழ்வியலையும் படம் பிரதிபலிக்கிறது.”

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்:

“வன்முறையே இல்லாமல் மன அமைதியைத் தரும் ஒரு படமாக இது இருக்கும். இப்படத்தின் கலை இயக்குநர் ஜெயசீலனுக்கு தேசிய விருதே கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த அளவுக்கு உழைத்துள்ளார். வடசென்னையை இதுவரை யாரும் காட்டாத கோணத்தில் இயக்குநர் காட்டியுள்ளார்.”

நடிகர்கள் & தொழில்நுட்பக் குழு:

இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், வினோதினி, சரத் லோகித்ஷவா, சுப்பிரமணிய சிவா, செந்திகுமாரி, பிரசன்ன பாலச்சந்திரன், ரோஷன் பஷீர், அருவி மதன், மூர்த்தி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில்ராஜு ஒளிப்பதிவையும், எஸ். பாஸ்கர் படத்தொகுப்பையும், ஜெயசீலன் கலை இயக்கத்தையும், மோகன் ராஜன் பாடல்களையும் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

வடசென்னையின் மற்றொரு முகத்தை எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் ‘ஆல் பாஸ்’ திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி செய்திகள்