மத்திய அரசுத் துறைகளில் 12,256 SSC CGL 2026 காலிபணியிட வாய்ப்புகள்!

மத்திய அரசுத் துறைகளில் 12,256 SSC CGL 2026 காலிபணியிட வாய்ப்புகள்!

த்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள குரூப் ’பி’ மற்றும் ’சி’ பிரிவைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL 2026) அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலையைப் பெறுவதற்கும், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தை அடைவதற்கும் இதுவொரு மிகச்சிறந்த மற்றும் அருமையான வாய்ப்பாகும்.

தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய முழுமையான விவரங்கள் இதோ:

காலிப் பணியிடங்களின் விவரங்கள் (Vacancies)

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்த ஆண்டிற்கான அறிவிப்பில் மொத்தம் 12,256 பணியிடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இவை குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிரப்பப்பட உள்ளன.

குரூப் ‘பி’ பதவிகள் (Group ‘B’ Posts)

  • Assistant Audit Officer

  • Assistant Accounts Officer

  • Assistant Section Officer

  • Inspector of Income Tax

  • Inspector (CGST & Central Excise)

  • Inspector (Preventive Officer)

  • Inspector (Examiner)

  • Assistant Enforcement Officer

  • Sub Inspector

  • Inspector Posts

  • Section Head

  • Executive Assistant

  • Research Assistant

  • Divisional Accountant

  • Junior Intelligence Officer

  • Junior Statistical Officer (JSO)

  • Statistical Investigator Grade-II

  • Office Superintendent

குரூப் ‘சி’ பதவிகள் (Group ‘C’ Posts)

  • Postal Assistant / Sorting Assistant

  • Auditor

  • Accountant / Junior Accountant

  • Senior Secretariat Assistant / Upper Division Clerks

  • Senior Administrative Assistant

  • Tax Assistant

  • Sub-Inspector

கல்வி மற்றும் வயதுத் தகுதி வரம்புகள்

  • கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் (Bachelor’s Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.எஸ்.ஓ (JSO) போன்ற சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.

  • வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேர்வுகள் 01.08.2026 அன்றைய தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

  • வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி (SC / ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

சம்பள விவரங்கள் (Pay Scale)

மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின்படி, தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கு ஏற்பத் தனித்தனி சம்பள விகிதங்கள் (Pay Levels) மாதாந்திரச் சம்பளமாக வழங்கப்பட உள்ளன:

  • Pay Level-8: ₹ 47,600 முதல் ₹ 1,51,100 வரை

  • Pay Level-7: ₹ 44,900 முதல் ₹ 1,42,400 வரை

  • Pay Level-6: ₹ 35,400 முதல் ₹ 1,12,400 வரை

  • Pay Level-5: ₹ 29,200 முதல் ₹ 92,300 வரை

  • Pay Level-4: ₹ 25,500 முதல் ₹ 81,100 வரை

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியான நபர்கள் முற்றிலும் கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test) மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக (Tier-1 & Tier-2) நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு (Tier-1 Exam):

  • இத்தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

  • General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

  • தேர்வை எழுதி முடிக்க 1 மணி நேரம் கால அளவு வழங்கப்படும். இதில் தகுதி பெறும் நபர்கள் மட்டுமே அடுத்த கட்ட முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வு (Tier-2 Exam):

  • இத்தேர்வு மொத்தம் 390 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

  • Mathematical Abilities (30 வினாக்கள்), Reasoning and General Intelligence (30 வினாக்கள்), English Language and Comprehension (45 வினாக்கள்), General Awareness (25 வினாக்கள்) என மொத்தம் 130 கேள்விகள் கேட்கப்படும்.

  • இதனுடன் கூடுதலாகக் கணினி அறிவுத்திறனை சோதிக்கும் Computer Knowledge பிரிவில் 20 வினாக்கள் கேட்கப்படும் (இது தகுதி மதிப்பெண் பெறும் பிரிவு மட்டுமே).

  • இதனைத் தொடர்ந்து இறுதிப் பகுதியாகத் தட்டச்சுத் தேர்வு (Data Entry Speed Test) நடத்தப்படும். சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு மட்டும் கூடுதல் தகுதித் தேர்வுகள் அவசியப்படும்.

பாடத்திட்டம் (Syllabus)

  • பொது அறிவு (General Awareness): இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் சார்ந்த நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, கலாச்சாரம், புவியியல், பொருளாதாரம், பொதுக் கொள்கை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

  • ஆங்கிலம் (English): தேர்வர்களின் அடிப்படை ஆங்கிலத் திறன், இலக்கணம் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றலைச் சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படும்.

  • கணிதம் (Quantitative Aptitude): எண் கணிதம், இயற்கணிதம், வடிவியல், முக்கோணவியல், வட்டி கணக்குகள், சராசரி, விகிதம் மற்றும் விழுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் அமையும்.

  • திறனறிதல் (Reasoning): எண்கள், படங்கள், திசைகள், எண் வரிசை, மறைகுறியீட்டு வரிசைகள் (Coding-Decoding) போன்ற பகுப்பாய்வுத் திறன் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ₹ 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது (முற்றிலும் இலவசம்).

  • விண்ணப்பிக்கும் வழிமுறை: தகுதியுடைய தேர்வுகள் https://ssc.gov.in/ என்ற மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.06.2026

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழுமையான மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பிடிஎஃப் (Notification PDF) லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம்:

👉 SSC CGL 2026 Official Notification Link