“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிகவே”!

“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிகவே”!

க்களுக்கான நீதி வழங்கக் கோரும் போராட்டங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால் ஆட்சியாளர்கள் ஆணிவேர் அறுந்து உறுதியில்லாமல் நிற்கிறார்கள் என்று பொருள். தாங்கள் செய்வது, சொல்வதும் மட்டுமே சரி மற்றும் உண்மை என்ற கற்பனை மிதப்பில் உள்ளார்கள் என்று பொருள். மக்களை நம்ப வைக்க ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்று பொருள். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசுக்கு தான் கண்டுபிடித்தது தமிழ்நாடு (இந்தியா) அல்ல என்று சாகும் வரையிலும் தெரியாது. தான் இந்தியாவைக் கண்டு பிடித்து விட்டேன் என்ற கற்பனையியலே வாழ்ந்து உயிர் துறந்தார்.

முதலாம் நூற்றாண்டு தொடங்கி சில நூற்றாண்டுகள் வரை கிரேக்க, ரோமானியர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) இருந்து சந்தனம், மிளகு, தேக்கு, கருங்காலி உள்ளிட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். முதலில் நேரடியாக அவர்கள் வந்து வாங்கிச்சென்றனர். பிறகு ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்களுக்கும் தமிழர்களுக்கும் (இந்தியர்களுக்கும்) இடையில் அரேபியர்கள் இங்கே வாங்கி அங்கேயும், அங்கே வாங்கி இங்கேயும் விற்கும் இடைச் சந்தையை உருவாக்கினார்கள்.

மேலும் ஒருக்கட்டத்திற்குப் பிறகு விலை மிக அதிகமாகவும், அரேபியர்கள் வைத்ததுதான் சட்டம் என்றானவுடன் நாமே ஏன் நேரடியாக தமிழ்நாட்டுக்கு (இந்தியா) சென்று வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற சிந்தனை ஐரோப்பிய ஆட்சியாளர்கள், வணிகர்களிடையே வலிமையாக எழுந்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு (இந்தியா) வரும் கடல் பாதையை ஐரோப்பிய சமூகம் முற்றாக மறந்துபோய் இருந்தது. தமிழ்நாடு (இந்தியா) எங்கே இருக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அரேபியர்களைக் கடந்து அவர்களின் நாடுகளின் வழியாகவும் செல்ல முடியாது. எனவே மாற்றுக்கடல் பாதை மூலமாக தமிழ்நாட்டை (இந்தியாவை) கண்டுபிடிக்கும் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காகத்தான் கொலம்பஸ் ஐரோப்பியர்களால் பண உதவி செய்யப்பட்டு கடல் வழிப்பயணம் மேற்கொண்டார். கெடுவாய்ப்பாக அவர் சென்றடைந்தது இன்றைய அமெரிக்கா . அங்கே இருந்த செவ்வியந்தியர்களைப் பார்த்து அதுதான் தமிழ்நாடு (இந்தியா) என்று நம்பிவிட்டார். அவர் இறக்கும் வரையிலும் தான் கண்டுபிடித்தது தமிழ்நாடு (இந்தியா) என்றே நம்பிக்கொண்டு இருந்தார்.

பிறகு போன மச்சானைக் காணவிலையே என்று ஐரோப்பியர்கள் வாஸ் கோட காமாவை அனுப்புகிறார்கள். மீனவர்களைப் பிடித்த வாஸ் கோட காமாவும் வந்து இறங்கியது இன்றைய கோழிக்கோடு. அன்றைய சேர நாடு.இதன்பிறகே கிழக்கிந்தியக் கம்பெனி எனும் பெயரில் பிரிட்டிஷ்காரர்கள் இங்கே வணிகர்கள் போல வந்து துப்பாக்கி முனையில் நம்மை அடிமைகொண்டு 250 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்கள், நமது வளங்களைக் கொள்ளை கொண்டார்கள்.

அவர்கள்தான் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய நிலப்பரப்பு முழுவதும் எவரும் வாய்திறந்து எதிர்ப்புக்குரல்கூட எழுப்பக்கூடாது என்று அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி ஒரு இழி ஆட்சி நடத்தினார்கள்.

இதைக்கண்டுதான், திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் “கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிகவே” என்று பாடினார். அவர் பாடி முடித்த சில பத்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்தது.

நான் எதுக்கு இதை சொல்றேன்னா
அதுக்காகத்தான் சொல்றேன்

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

Related Posts