ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும் – ஒரே நாளில் ரஷ்யா உக்ரைனை பொசுக்கிவிட முடியாது!

ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும் –  ஒரே நாளில் ரஷ்யா உக்ரைனை பொசுக்கிவிட முடியாது!

தமிழக மீடியாக்களும் அதைவிட இம்சையான அரைகுறை யூ டியூபர்களும் சொல்வது படி ஒரே நாளில் ரஷ்யா உக்ரைனை பொசுக்கிவிட முடியாது மானிடன் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் வளர்ந்தாலும் உலகபந்தும் பரப்பளவும் மிகமிக பெரிது, அவ்வகையில் உக்ரைனும் ஐரோப்பாவில் இரண்டாம் பெரியநாடு. அந்நாட்டை உடனே கைபற்றமுடியும் என்பதெல்லாம் கனவு, உக்ரைன் ராணுவ பதிலடியும் வெளிநாடுகள் உதவியுடன் கடுமையாக இருக்கும் ஏன் உக்ரைன் சீருடையுடன் நேட்டோவே ரகசியமாக களமிறங்கலாம், மிக அழகாக ரஷ்யாவினை உள்ளே விட்டு சுற்றி வைத்து அடிக்கும் திட்டமிருக்கலாம்.

ஆனால் இது ஒரே நாளில் முடியும் யுத்தம் அல்ல, ரஷ்யா பலமான ராணுவ நாடாக இருந்தாலும் தொடர்ந்து போர் நடத்தவும் உக்ரைனை தக்கவைக்கவும் பெரும் பணமும் இதர பொருளாதார பலமும் தேவை . நேற்றே உலகின் ரஷ்ய பணமெல்லாம் முடக்கபட்ட்டு பெரும் தடைகள் அறிவிக்கபட்ட நிலையில் இனி பொருளாதாரம் சரியும் நீண்ட காலம் இப்போர் நீண்டால் சிக்கல் பெரிதாகும். இதனால் இப்பொழுதே ஒரு முடிவுக்கு வரமுடியாது . ஆக மறுபடியும் சொல்கிறோம்.. உக்ரைனை ஒரே நாளில் கைபற்றுவதும் பிரச்சினை சில நாட்களிலே முடியும் என்பதெல்லாம் நடக்க கூடியவை அல்ல‌.

இது மிகபெரிய சிக்கலும் குழப்பமும் கொடுக்க கூடியவை, ரஷ்யா மட்டுமல்ல பல நாடுகளை சிக்கலில் தள்ளும் விஷயம் இது. சிலர் கனவு காண்பது போல அதாவது ஸ்டாலின் இந்திய பிரதமராகி உலகை மிரட்டுவார் என கனவு காண்பது போல அமெரிக்காவோ நேட்டோவோ உக்ரைனுக்குள் நுழையாது. காரணம் உக்ரைன் நேட்டோ நாடு அல்ல, உண்மையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பொதுவான நாடாக இருக்கத்தான் அது விரும்பிற்று அதுதான் சிக்கலாயிற்று. அமெரிக்கா நேரடியாக இங்கு வராது காரணம் ரஷ்ய கிழக்கு எல்லை அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து சில கிமீட்டர்கள் வந்துவிடும் அங்கு அடுத்த மோதல் வெடிக்கும். இதனால் உக்ரனை வைத்து மேல் நாடுகள் ரஷ்யாவுக்கு தூண்டிலோ வலையோ விரித்து விளையாடுகின்றார்கள், அவர்களுக்கு எல்லாமே பணம் பார்க்கும் விளையாட்டு .

யார் கண்ணீரும் ரத்தமும் அழுகையும் கொட்டினாலும் அவர்கள் இரக்கமே இல்லாமல் விளையாடும் விளையாட்டு. இந்த விவகாரத்தில் தமிழக யூ டியூப்பர்கள் தமிழக மீடியாக்களை தயவு செய்து தவிர்ப்பது உங்கள் மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் டிவி போன் லேப்டாப்க்குகளுக்கும் நல்லது .காரணம் மிக எளிதாக 1945ல் ஜப்பானில் போட்ட அணுகுண்டை காட்டி நேற்று உக்ரைனில் வீசபட்டது என்பார்கள், 1986ல் உடைந்த செர்னோபில் அணுவுலையினை காட்டி ரஷ்ய ஏவுகனை தாக்கியது என்பார்கள். அவர்களுக்கு ராம்சாமி, சமூக நீதி , பாஜக பாசிசம், காந்தியினை அய்யய்யோ கொன்றார்கள், இலங்கை தீவிரவாதிகளை ஏன் விடுவித்து பாரத ரத்னா கொடுக்க கூடாது, பள்ளிக்கே செல்லாமல் ஒருவன் ஏன் டாக்டராக முடியாது போன்றவை தவிர ஏதும் தெரியாது.இதையும் மீறி நீங்கள் அந்த மீடியாக்களை கண்டால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பின்வாங்கினார் புட்டீன், ஸ்டாலின் சீற்றம் அமெரிக்கா அச்சம், உக்ரைனுக்கு ஸ்டாலின் 10 ஆயிரம் கோடி டாலர் நிதி அறிவிப்பு எனும் வகையில் செய்திகள் வரும் அதை காண்பது உங்கள் தலையெழுத்தென்றால் யார் என்ன செய்ய முடியும்?

ஸ்டான்லி ராஜன்

error: Content is protected !!