இனி ஆகஸ்ட் 14 -பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்=பிரதமர் அறிவிப்பு!

இனி ஆகஸ்ட் 14 -பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்=பிரதமர் அறிவிப்பு!

ந்திய சுதந்திர தினம் நாளை நாடெங்கும் கொண்டாட ஆயத்தமாகும் சூழலில் பிரதமர் மோடி இன்று திடீரென, ‘நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக (Partition Horrors Remembrance Day) அனுசரிக்கப்படும். சமூகப் பிரிவினைகள், ஒற்றுமையின்மை ஆகிய விஷங்களை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித உணர்வை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த தினம் நமக்கு நினைவூட்டட்டும்” என்று குறிப்பிட்டு போட்ட ஒரு ட்விட் ட்ரெண்டாகி விட்டது..

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டு நிறைவு பெறுவதை ஒட்டி ஒரு ஆண்டுக்கு விழாக்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அம்ருத மஹோத்ஸவம் என இந்தக் கொண்டாட்டங்களுக்கு பயிரிடப்பட்டுள்ளது. நாளை இந்தக் கொண்டாட்டங்கள் துவங்க உள்ள நிலையில் பிரிவினை பயங்கர நினைவு தினமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதியே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார்.  1947ல் அறிவிக்கப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம் காரணமாக ஏற்பட்ட பிரிவினையால் 12.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பொருட்சேதமும், ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த கொடுந்துயரை அனுசரிக்கும் விதமாக ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுந்துயரம் நினைவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட வன்முறையை நினைவில் கொண்டு அதை தவிர்த்து வாழ இத்தினம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத் தகுந்தது.

இது குறித்து பிரதமர் மோடி பதிவு இதோ::

பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. மக்களைப் பற்றி கவலைப்படாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பல லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர், தங்கள் உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.

சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித வலுவூட்டலின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசப் பிரிவினையின் நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும்.

Related Posts

error: Content is protected !!