பிரான்ஸ் & அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

பிரான்ஸ் & அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

லக நாடுகளை இன்றளவும் மிரட்டிக் கொண்டிருக்கும்கொரோனா பாதிப்புகள் பிரான்ஸ் நாட்டில் வெகுவாக குறைந்துள்ளதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதே போல் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவில், சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பியுள்ளனர். அதன் காரணமாக, ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள், நேற்று முன் தினம் தளர்த்தப்பட்டது. தியேட்டர்கள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டன.

தெற்கு பிரான்சில் உள்ள புகழ்பெற்ற நைஸ் நகரின் கடற்கரை விடுதி ஒன்றில் திறந்தவெளி மேஜைகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் அரிய வகை வைன்களை குடித்து மகிழ்கின்றனர்.

பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள லே வின்சென்னே திரையரங்கு திறக்கப்பட்டவுடன் நேற்று முன் தினம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்காக ஓடியது. சமூக இடைவெளி காரணமாக 35 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. திரையரங்குகளில் ஜூன் 9 முதல் 65 சதவீதமும், ஜூன் 30 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது

அது போல் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக உலக சினிமாவின் தலைமையகமாக விளங்கும் ஹாலிவுட் சினிமா தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக சர்வதேச சினிமா வியாபாரம் முடங்கியது. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவில், சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பியுள்ளனர். அதன் காரணமாக, ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதை ஒரு விழாவாகக் கொண்டாடிய திரைத்துறையினர், ‘மீண்டும் பெரிய திரை’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் ரிலீஸுக்குத் தயாரான ‘தி ப்ரோடேஜ்’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. 14 மாதங்களுக்குப் பின் அகன்ற திரையில் சினிமா பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!