நடப்பு மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து பணத்தை அனுப்பலாம்!!

நடப்பு மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து பணத்தை அனுப்பலாம்!!

டப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்புவோர் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும் என்றும் மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அளித்திடும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே கணக்கீடு மேற்கொள்வர் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!