சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

ராஜேஷ் தாஸ் இணையத்தில் இன்று அதிகமாகப் பகிரப்படும் பெயரையும், அதன் காரணத்தையும் நம் வாசகர்களுக்கு விளக்குவது நலமெனச் சொல்லி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ:
வுமண் ஐபிஎஸ் அதிகாரி இருவரின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்குது.
யாரிந்த ராஜேஷ்தாஸ்..? என்ன பிரச்னை?
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக விஜயகுமார் ஓய்வு பெற்றதையடுத்து அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார்.
அவரது பாதுகாப்புக்கு சென்னையில் இருந்து ராஜேஷ் தாஸ் சென்றுள்ளார். விழா முடிந்து முதல்வர் சேலம் சென்றதும், ராஜேஷ் தாஸ் சென்னைக்கு காரில் கிளம்பினார். உயர் அதிகாரி என்பதால், பல மாவட்ட அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர். அதில் ஒரு மாவட்டத்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனது மாவட்ட எல்லையில் ராஜேஷ்தாஸை வரவேற்றுள்ளார்.
உடனே ராஜேஷ்தாஸ் அந்த பெண் அதிகாரியிடம் வேறு சில வரவேற்புகளையும் கேட்டுள்ளார். கூடவே அந்த பெண் அதிகாரியின் மீது கையை வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரம்.
அதை அடுத்து நடந்த சம்பவம் குறித்தும், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு புகார் அனுப்பினார். அதைக் கண்டுக் கொள்ளாத சூழலில் டி எம் கே எம்.பி கனிமொழி காட்டமா ஒரு ஐபிஎஸ் மீட்டு விவகாரத்தையே விசாரிக்காத பழனிசாமியின் அரசில் கான்ஸ்டபிள் ரேஞ்சிலிருக்கு வுமன் போலீஸூக்கு நேரும் அவலம் தெரியுமா?- ந்க்கர ரேஞ்சில் கேள்வி கேட்டதில் உடனடியா இந்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க விசாகா கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியில், ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி வி.கே. ரமேஷ் பாபு, உள்ளிட்ட 6 பேர் விசாரணைக் குழுவில் இடம் பிடித்துள்ளனர். பெண் அதிகாரி பாலியல் புகார் குறித்து விரிவாக விசாரித்து விரைவில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ராஜேஷ்தாஸ், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷின் ஹஸ்பெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் தான் நம்ம தம்பி ஒருத்தர் லாஸ்ட் அக்டோபரில் எழுதுன சில விசயங்களைக் கோர்க்க முடியுது.. போலீஸ் டிப்பார்ட்மெண்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், டி.ஜி.பி-யாகப் பதவி உயர்வுபெற்றார். அவருக்கு, `சட்டம்-ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி’ என்ற புதிய பதவி ஒதுக்கப்பட்டது.
ஏற்கெனவே, சட்டம் ஒழுங்கு பொறுப்பை டி.ஜி.பி திரிபாதி கவனித்துவரும் நிலையில், இந்தப் புதிய நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டிய தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன். ` கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸுக்கு பதவி உயர்வு அளித்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக முதல்வர் பழனிசாமி நியமித்து இருப்பது, உச்ச நீதிமன்றத்தால் `பிரகாஷ் சிங்’ வழக்கில் வழங்கப்பட்ட ஏழு கட்டளை களுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானது. தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி-யாக திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி அந்தஸ்துள்ள அதிகாரியைச் சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம். அரசியல்ரீதியான அழுத்தங்கள், சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து, பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம், `சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்’ என்று வரையறுத்தது.
தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ்பெற்ற தமிழகக் காவல் துறைக்கு, குறிப்பாக சட்டம், ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் கொலைகள் அன்றாடச் செய்திகளாகி விட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
தமிழகக் காவல்துறையைச் சீரழிக்கும் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. ராஜேஷ் தாஸ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால், அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-க்குப் போட்டியாக நியமிப்பதும், அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு ரூமில் அமர்த்திவைப்பதும் முதல்வருக்கு அழகல்ல. இரட்டைத் தலைமையால் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி அலுவலகத்திலும் அரங்கேறட்டும். இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்திவிடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’ எனக் காட்டமாக விமர்சித்திந்தார் – அப்ப்டீனெல்ல்லாம் எழுதி இருந்தார்
இது போக தி.மு.க., சார்பில் நடைபெற்ற, ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ அப்படீங்கற பிரசாந்த் கிஷோர் ஐடியாப் படி நடந்த பிரசாரத்திற்காக, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள்ளே டிஎம்கே-யின் புதுத் தலீவர் உதயநிதி சுற்றுப்பயணம் செய்து வந்தார்.
அச்சூழலில் போலீஸ் துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தடையை மீறி பிரசாரம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி சலசலப்பு ஏற்படுத்தியதால் அந்த புள்ளையாண்டனை போலீசார் கைது செய்யறதா மாதிரி சொல்லி கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போய் சாப்பாடெல்லாம் போட்டு விடுவிச்சாங்க. (கட்டிங் கண்ணையா)
அதே சமயம் நாகப்பட்டினம் மாவட்டம், ராஜகிரியில் நடந்த கூட்டத்தில், தேர்தல் பிரசார வேனில், உதயநிதி அமர்ந்திருந்து, பெண் குழந்தைக்கு செந்தாமரை என்ற பெயரை சூட்டினார். அப்போது, உதயநிதியும் முக கவசம் அணியவில்லை; குழந்தையை கொடுக்கிற பெற்றோரும், முக கவசம் அணியாமல் நிற்கின்றனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிச்சு.
ஆனா இதை எல்லாம் கண்டுக்காம நாகப்பட்டினம் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துரை யாடல் கூட்டத்தில், உதயநிதி, என் கூட்டத்தை கெடுக்க இரு ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ். பெயரெல்லாம், நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு… எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா…அப்படீனெல்லம் பேசினார்..
அதுக்கு உதயநிதி இன்னிவரை விளக்கமோ, மன்னிப்போ கேட்காத நிலையில் இப்போ ஸ்டாலினை விட பவர்ஃபுல்லாக டி எம் கே-யில் வளர்ந்து விட்டதா சொல்லப்படும் உதயநிதி ஸ்டாலினால் ஒரு ஐ பி எஸ் ஆபீசருக்கு ஆபத்து ஏதும் வந்து விடக் கூடாது என்பதால்தான் முதல்வர் பழனிசாமி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதா இன்னொரு தகவல்.
எது நெசமோ.. ஒரு ஐ பி எஸ் ஆபீசர் காத்திருப்புப் பட்டியலில்- அதுவும் பீலா ராஜேஜின் காதல் கணவன் பாலியல் புகாரில் இதுக்கப்பட்டிருப்பதும், அதை விசாரிக்க ஐவர் குழு அமைக்கப் பட்டிருப்பதும் ஸ்காட்லாண்ட் போலீசுக்கு இணையாந்து தமிழக போலீஸாக்கும் -முன்னு நம் ஆந்தையார் பில்ட் அப் பண்ணி 1990-களில் எழுதிய்தை எல்லாம் பொய்யாக்கும் போக்கு நிலவுவது சோகம்தான்