25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இம்மாதம் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் பேருந்து ஓடாது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!