7 மாதங்களில் 364 புத்தகங்களை படித்த 9 வயது பிரிட்டன் சிறுமி!
பிரிட்டனைச் சேர்ந்த ஃபெய்த் என்ற 9 வயது சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள அதீத விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார்.முழு நேரமும் புத்தகத்தையே படிக்காமல் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், கராத்தே மற்றும் டிரம்ஸ் இசைப்பது போன்ற கலைகளைக் கற்று வருவதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார்.

அதிகலவு புத்தகமும் கையுமாக இருப்பவர்களை புத்தக புழு என கூறுவார்கள். இங்கிலாந்தின் செஷிர் பகுதியில் உள்ள ஆஷ்லே என்ற இடத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பெய்த் ஜாக்சன். இவள் தனது மிக குறைந்த வயதில் 364 புத்தகங்களை படித்து சாதனை படைத்து இருக்கிறாள். இவற்றை 7 மாதங்களில் படித்து முடித்து இருக்கிறாள். இவள் 4-வது வகுப்பு படித்து வருகிறாள்.சேஷைர் மாகாணத்தில் உள்ள ஆஷ்லி நகரைச் சேர்ந்த அந்தச் சிறுமி தொலைக்காட்சியிலும், கம்ப்யூட்டர்களிலும் பொழுதைக் கழிக்காமல், ரோல்ட் டால் போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள், ஹாரி பாட்டர் கதைகள் போன்ற புத்தகங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
தொடக்கப்பள்ளி நிலையில் ஆசிரியர்களின் உந்துதலால் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ள அச்சிறுமி, மிருகங்கள், மாயாஜாலங்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்த புத்தகங்களையே அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி மற்றும் கம்ப்யூட்டர்களை விட புத்தகங்களே கற்பனைத் திறனை அதிகரிப்பதாக ஃபெய்த்தின் தாயார் லாரன் தெரிவித்துள்ளார்.
9-year-old UK girl reads 364 books in 7 months!
**************************************************************
A nine-year-old voracious reader in the UK has managed to read an incredible 364 books in just seven months.Faith, of Ashley, Cheshire, shuns TV and computer games, preferring to settle down with a Roald Dahl or Harry Potter.
Photo courtesy:Cavendish Press


