சச்சின் எம்.பி யாகி டக் அவுட்! – ராஜ்யசபா இணையதளம் தகவல்!

சச்சின் எம்.பி யாகி டக் அவுட்! – ராஜ்யசபா இணையதளம் தகவல்!

கிரிக்கெட் உலகின் சாதனை மன்னன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்ஆகிவிட்ட நிலையில் இது வரை பார்லி.யில் ஒரு கேள்வி கூட கேட்டு விவாதம் நடத்தவில்லை.அத்துடன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் ரூ. 10 கோடியை வீணடித்துள்ள்ளார் என்று ராஜ்யசபா இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.இவரைப் போன்றே நடிகை ரேகா, மற்றும் பாடலாசியர் ஜாவியத்அக்தர் உள்ளிட்டோர் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்ற நாள் முதல் பார்லி.யில் கேள்வி எதுவும் கேட்டு. விவாதமும் நடத்தாததுடன் தொகுதி மேம்பாட்டு நிதி கேட்டு அரசிடம் வலியுறுத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது.
sachin tendulkar
தற்போது பார்லிமெண்டின் கடைசி கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கிடையில் காங். கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 11-வது எம்.பி.யாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்(41), கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அப்போது சில வாக்குறுதிகளெல்லாம் கொடுத்தார்.ஆனால் கடந்த 2012-ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வானவர் இதுவரை நடந்த பார்லி. கூட்டங்களில் ஓரிருமுறை கலந்துகொண்டாலும் ஒரு கேள்வி கூட கேட்டதில்லை என்று ராஜ்யசபா இணையதளத்தில் இவர் குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்லி.யின் இரு சபைகளிலும் உள்ள எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கியு்ள்ளது. இந்த நிதி மூலம் எம்.பி.க்கள் தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வர் அந்த வகையில் மும்பை புறநகர் பகுதியில் சச்சினின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சிக்காக இதுவரை ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை உரிய முறையில் செலவிட சச்சின் முயற்சியோ,நடவடிக்கையே மேற்கொள்ள வில்லை.இதனால் இரண்டு ஆண்டுகளி்ல் ரூ. 10 கோடி நிதி அப்படியே உள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் இவரது செயல்பாடுகள் பூஜ்யம் என்றே உள்ளது.என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tendulkar duck out in Rajya Sabha
**************************************************
cricketer Sachin Tendulkar has literally failed in Rajya Sabha. In fact, he was duck out. We’re talking about his Rajya Sabha performance to which Sachin was recently nominated. He is under the flak by media as he couldn’t make use of crores of rupees he get under MP Local Area Development (MPLAD) Fund for the betterment of poor. He even scored duck in discharging other responsibilities like raising rnquestions, seeking assurances from the government and participating in rndebates. – See more at: http://www.gulte.com/news/25098/Tendulkar-duck-out-in-Rajya-Sabha#sthash.x6SZo4PE.dpuf

Related Posts

error: Content is protected !!