யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மத்திய அமைச்சகப் பணிகளுக்கான வாய்ப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மத்திய அமைச்சகப் பணிகளுக்கான வாய்ப்பு!

யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு – I (சி.டி.எஸ்.,) 2018’ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் : டே ராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 100ம், எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 45ம், ஐதராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (ஆண்) 225ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (பெண்) 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள் ளன.

வயது தகுதி :விண்ணப்பிக்கும் பிரிவுக்கு தகுந்தபடி வயது மாறுபடுகிறது. சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி ஐ.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். நேவல் அகாடமிக்கு இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பு தேவைப் படும். முழுமையான தகவல்களை இணைய தளத்தில் அறியவும்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபாய்.

தேர்ச்சி முறை பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள் : 2017 டிச., 4.

விபரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/ files/Notification_CDSE_I_2018_Engl.pdf

error: Content is protected !!