தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம் = சபாஷ்!

தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம் = சபாஷ்!

தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. தற்போது டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழ்நாடு போலீஸ் ஆரம்பத்தில் அதாவது 1659ல் – மதராஸ் பட்டணத்தின் பின்னர் மெட்ராஸ் – இப்போது சென்னையாகி விட்ட நகரிலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளயைர் அரசு நியமித்தது. இது தான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல். அதன் படிப் படி வளர்ச்சியுடன் கிட்டத்தட்ட 245 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட போலீஸ் துறையில் தவறுகளை கண்டறியவும் குற்றம் செய்தவர்களை பிடிக்கவும் நவீன தொழில் நுட்ப வசதி அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்  முன்னொரு காலத்தில்  வயர்லெஸ் கருவி மட்டுமே ஹைடெக்காக கொண்டிருந்த நம் மெட்ராஸ் போலீஸ் பல்வேறு வழக்குகளை தன் உடல் மற்றும் மூளை பலத்தை மட்டும் பயன்படுத்தி துப்பறிந்து சாதனை படைத்திருக்கிறது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை முழுமையான பக்காவான சினிமாவாக கொடுத்து பார்ப்ப்போரிட மிருந்து சல்யூட் வாங்கி இருக்கிறான் இந்த தீரன்.

அதாவது தந்தை பணி புரிந்த துறையான போலீஸில் சேர முடிவெடுத்து டிஎஸ்பியாக பயிற்சி பெற்று பணிக்கு சேர ஆயத்தமாகும் கார்த்தி (தீரன் திருமாறன்) யை கண்டதும் காதல் செய்யும் ப்ளஸ் டூ மாணவி (!) ரகுல் ப்ரீத் சிங்-கை மிரட்டியே லவ்வி கல்யாணமும் செய்து கொள்கிறார். அதன் பின்னர் ரொம்ப யோக்கியமான போலீஸ் ஆபீஸராக இருப்பதால் தமிழகத்தில் எல்லா மாவடங்களுக்கும் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். அப்படி டூட்டி கிடைத்த ஊரில் கிடைத்த ஒரு சிக்கலான வழக்கை விசாரித்து .. விசாரித்து.. விசாரித்து.. – எப்படி முடிக்கிறார் மற்றும் முடிந்து போகிறார் என்பதுதான் படம்.

1995 முதல் 2005 வரை பெங்களூரு – கும்மிடிப்பூண்டி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோர வீடுகளில் கொள்ளை, கொலைகளை நடத்திய சம்பவங்களை கோர்த்து, ரியலாக இவ்வழக்கை இன்வெஸ்டிகேட் செய்த ஜாங்கிட் & டீம் ரோலை ரொம்ப கச்சிதமாக செய்து சபாஷ் வாங்கி இருக்கிறார் கார்த்தி. அதிலும் ”மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள ஃபிட்னஸையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குணாதிசயங்கள் மற்றும் உடல்மொழி யையும் பயன்படுத்தியுள்ளேன்” என்று முன்னர் கார்த்தி சொன்னது நூறு சதம் உண்மை.

இதனிடையே  சில உண்மையான – அதுவும் போலீஸ் சம்பநதப்பட்ட நிகழ்வுகளை சினிமாவாக ஆக்கும் போது குளறுபடியாகி அது டாகுமெண்டரியாகி விடுவதும் அல்லது முழு மசாலாத்த னமாகி உண்மைக்கு மாறாகி விடுவதும் தமிழ் உள்ளிட்ட எல்லா மொழி சினிமாக்களிலும் நடப்பதுதான். ஆனால், இந்த தீரன் படத்திற்க்காக இயக்குநர் ரொம்ப ஹோம் ஒர்க் செய்திருப்பதை ஸ்பெஷல் பூங்கொத்து பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் கிளைமாக்சில் நாயகன் ஒரு டம்மி போஸ்டில் இருந்தபடி தன் சேர் உடைந்து போனதை மாற்ற அரசுக்கு மனு போட்டு காத்திருப்பதாக காட்டும் அப்பாவி சீன் ஒன்றே போதும் – தமிழக போலீசின் தலைகுனிவு போக்குக்கு.

அதே சமயம் குற்றவாளி யார் என்று ஹீரோ போலீசுக்கும், போலீசு இவன்தான் – அதுவும் தன்னைத்தான் தேடி இவன் வந்திருக்கிறான் என்று என்று அக்க்யூஸூட்டும் தெரிந்ததை அறிந்த ஆடியன்ஸ் சலிப்பூட்டும் விதத்தில் பல காட்சிகள் இருப்பதால் படத்தின் ஈர்ப்பு குறைகிறது.  குறிப்பாக வில்லனைத் தேடி ஊருக்குள் போகும் போலீஸ்  கார்த்தி & கோ-வை ஊர் ஜனங்கள் கேரோ செய்வதும் அதை அடுத்து நடக்கும் சண்டை காட்சிகளெல்லாம் படத்தின் உண்மை த்தன்மையை வலுவிழக்க வைக்கிறது.  நம்ம மதராஸி என்றில்லை.. ஒட்டு மொத்த போலீஸின் தன்னம்பிக்கை ஆயுதமே துப்பாக்கிதான்.. அந்த ஆயுதத்தை ஒட்டு மொத்த ஊரே கூடி தாக்க வரும் போதும் கூட எடுக்காமல கம்பு சுத்தி தப்பிப்பதெல்லாம் ஓவர். அத்துடன் சக நிருபன் சரவணன் சவடமுத்து கொட்டாவி விட்டபடி சொன்ன  ‘  எதுக்கு இந்த குத்து பாட்டு’ -வேஸ்ட்.’  என்பது போன்ற சில பல வேண்டாதவைகளை கட் பணி ஷார்ப் பண்ணினால் இரண்டே மணி நேரத்தில் அருமையான எண்டெர்யின்மெண்ட் + நியூ ரிக்கார்ட் கிடைத்திருக்கும்..

ஆனாலும் எண்ட் கார்டாக உண்மையான காவல் அதிகரிகளுக்கு இப்படம் சமர்பணம் என்று அறிவித்து விட்டு, இந்த உண்மை சம்பவத்தில் ரியலாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருதோ, பதவி உயர்வோ வழங்கப்படவில்லை என்று  உரத்தக் குரலில் கூறி முடித்து சம்பந்தப்பட்ட அதிகாரி ஜாங்கிட்-டிற்கும் படத்தை போட்டு காண்பித்து ‘ சபாஷ்’ வாங்கிய இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய சினிமாதான் என்று சொன்னால் மிகையல்ல.

மார்க் – 5 / 3.50

error: Content is protected !!