கடந்த செப்டம்பர் 8ம் தேதி  ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் பிரதியுமன் கழிவறையில் ஆயுதம் ஒன்றால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்து கிடந்தான்.
அந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் பள்ளி பேருந்தின் நடத்துனர் நோய்டா போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கொல்லப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த மனுவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு, பிரதியுமன் படித்த அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

பள்ளியில் குறைந்த மதிபெண் வாங்கும் அந்த மாணவன், அன்று நடக்க இருந்த பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தையும் ஒரு தேர்வையும் ஒத்திபோடவே சிறுவனைக் கொன்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக மாணவனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் இன்று குர்கான் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றம் மாணவனை ஆறு நாள் சிபிஐ காவலில் வைக்க அனுமதி தரவேண்டும் என சிபிஐ கோரியது. ஆனால் மூன்று நாள் மட்டுமே சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்குவதாக நீதிமன்றம் கூறியது. வரும் சனிக்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பள்ளிப் பேருந்து நடத்துநர் விடுதலை செய்யப்படவில்லை. அவர் மீதான புகார் விலக்கிக் கொள்ளப்படவில்லை என சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

error: Content is protected !!