2026 மகளிர் ஐபிஎல்: அணிகளின் முழு வீராங்கனைகளின் முழுப் பட்டியல் !
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 சீசனுக்கான மெகா ஏலம் வெற்றிகரமாக முடிவடைந்தது. அனைத்து ஐந்து அணிகளும் தங்களின் பலம் வாய்ந்த வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, வரவிருக்கும் போட்டிக்குத் தயார் நிலையில் உள்ளன.
ஆம்… உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் நிறைவடைய இருக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஏலப்பட்டியலில் 194 இந்தியர்கள், 83 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றனர்.

⭐ ஏலத்தின் முகம்: தீப்தி ஷர்மா சாதனை!
சமீபத்தில் இந்திய ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியின் போது ‘தொடரின் சிறந்த வீராங்கனை’ விருதை வென்ற முன்னணி ஆல்-ரவுண்டரான தீப்தி ஷர்மா, இந்த ஏலத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்தார். தீப்தி ஷர்மா, ₹3.2 கோடிக்கு ‘ரைட் டு மேட்ச்’ (RTM) கார்டு மூலம் உபி வாரியர்ஸ் அணியால் மீண்டும் தக்கவைக்கப்பட்டார். இது, மகளிர் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட/தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளில் இவரையும் ஒருவராக ஆக்கியுள்ளது. அதே சமயம் இதுவரை விளையாடாத வீராங்கனைகளில் தியா யாதவ் மட்டுமே விற்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியால் அவரது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், அதிரடி தொடக்க வீராங்கனையுமான அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படாமல் அன்சோல்டு ஆனார். அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்குக்கூட அவரை வாங்க யாரும் முன்வராதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


