2024- ல் இந்திய மாநிலங்களின் GST பங்களிப்பு!.

2024- ல் இந்திய மாநிலங்களின் GST பங்களிப்பு!.

ஜிஎஸ்டி வரியின் மூலம் மாநிலங்களின் மறைமுக வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டு மத்திய அரசு மேற்கொள்கிறது. பெட்ரோல், டீசல், புகையிலை மற்றும் மது இவற்றைத் தவிர மற்ற அனைத்துக்குமான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும். ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைவருக்கும் சமமான வாக்களிக்கும் உரிமை இல்லை. அங்கு மத்திய அரசு மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை தன்னிடம் வைத்துள்ளது. இது அப்பட்டமாக மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இது எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய விஷயம் அல்ல, எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு என்ற மாநிலம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸுக்கு சமமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒரு மாநிலம். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஆனால், அந்த அரசுக்கு வரி விதிக்கும் உரிமை இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும் என்றெல்லாம் பலரும் உரக்க சொன்னாலும் யாரும் சட்டை செய்வதில்லை.

இந்நிலையில் கடந்த 2024ல் எந்தெந்த மாநிலை எவ்வளவு தொகை ஜி எஸ் டி -யாக வழங்கியுள்ளது என்ற விபரம் இதோ

மகாராஷ்டிரா – 29,260 கோடி,
கர்நாடகா -12,526 கோடி,
தமிழ்நாடு – 10,956 கோடி,
ஹரியானா – 10,403 கோடி,
குஜராத் – 10,279 கோடி,
உத்தரப்பிரதேசம் – 8,117 கோடி,
டெல்லி – 5,593 கோடி,
தெலுங்கானா – 5,224 கோடி,
மேற்கு வங்கம் – 5,190 கோடி,
ஒடிசா – 4,841 கோடி,
ராஜஸ்தான் – 4,146 கோடி,
மத்திய பிரதேசம் – 3,460 கோடி,
ஆந்திரப் பிரதேசம் – 3,315 கோடி,
ஜார்கண்ட் – 2,981 கோடி,
சத்தீஸ்கர் – 2,882 கோடி,
கேரளா – 2,575 கோடி,
பஞ்சாப் – 2,294 கோடி,
உத்தரகாண்ட் – 1,547 கோடி,
பீகார் – 1,521 கோடி,
அசாம் – 1,374 கோடி,
இமாச்சல பிரதேசம் – 816 கோடி,
கோவா – 578 கோடி,
சிக்கிம் – 329 கோடி
புதுச்சேரி – 228 கோடி,
சண்டிகர் – 224 கோடி,
மேகாலயா – 150 கோடி,
திரிபுரா – 83 கோடி,
அருணாச்சல பிரதேசம் – 70 கோடி,
லடாக் – 68 கோடி,
நாகாலாந்து – 51 கோடி,
மணிப்பூர் – 46 கோடி,
மிசோரம் – 28 கோடி…..

Related Posts