32°C
விளம்பரம்
Advertisement

மொபைல் ஃபோனுக்கு லிக்வுட் கூலிங் டெக்னாலாஜி!

admin சேலம் Published: April 16, 2015 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




எப்ப பார் டீச்சர் வீடியோ.. ஹன்ஸிக்கா வீடியோன்னு பார்த்துகிட்டே இருக்கிற நல்லவங்களுக்கும், கேம் விளையாடியே அந்த ஃபோனை செங்கல் சூளை மாதிரி ஆக்கும் வல்லவர்களுக்கும், கடலை போட்டு போட்டு மொபைல் ஃபோனை கருக வச்ச கண்மணிகளுக்கும், எப்ப பார் பத்து அப்ளிக்கேஷனை திறந்து ஒரிஜினல் ஐடில அம்பி கமென்ட்டு ஃபேக் ஐடில ரெமோ கமென்ட்டும் ஒரே மொபைல்ல போடும் அன்னியன்ஸுக்கும் ஒரு விடிவு காலம் புறந்தாச்சு.
ravi apr 16
இனிமே உங்க ஹாட்டான ஃபோனுக்கு கார் எஞ்சின் எப்படி சூடாகாம தடுக்க கூலன்ட் அல்லது தண்ணீர் உபயோகபடுத்துகிறமோ அதே மாதிரி மொபைல் ஃபோனுக்கு லிக்வுட் கூலிங் டெக்னாலாஜியை கண்டுப்பிடித்துள்ளது ஃபிஜிட்ஸு என்னும் ஜப்பானிய நிறுவனம்.
இது எதுக்குனு தெரியாமல் கேட்கும் ஆட்கள் நிறைய பேர் கணணிக்கே லிக்விட் கூலிங் யூஸ் பண்ணுவதை பார்த்திருப்பாங்க. அதிக மெகாபைட் எடுக்கும் டிஸைன் வேலை – எடிட்டிங் வேலை – மற்றும் கேம் விளையாடும் அத்தனை ஆட்களும் லிக்விட் கூலிங்கை கணணிக்கு உபயோகபடுத்டுவதை பரவலா யூஸ் பன்ணுவாங்க.

இதன் மூலம் உள்ளே உள்ல ஜிபியூ அல்லது சிபியூ கூலிங் ஆனா ஒரு ஃபோனின் பெர்ஃபார்மென்ஸ் மிக துள்ளியமாக வேலை செய்யும். ஆப்பிள் நிறூவன ஃபோன்கள் ஒரு வகையில் அதிக சூடு தராது ஏன் என்றால் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை தான் வேலை செய்ய வைக்கும்…. ஆனால் ஆன்ட்ராயிட் ஒரு வாரம் துவைக்காம இருக்கும் துணி போல அத்தனை அப்ளிகேஷனும் வேலை செய்யும்.

சில சமயம் வெளியே அப்ளிகேஷன் இல்லாது போல இருந்தாலும் உள்ளுக்குள் வேலை செய்யும் அதனை நன்கு தெரிந்தவர்கள் ஃபோர்ஸ் ஸ்டாப் என்னும் முறையை கொண்டு அதன் தேவையில்லா இயக்கத்தை நிறுத்துவார்கள். இனிமேல் இந்த வகை டெக்னாலஜி வந்தால் எல்லா ஆப்ஸையும் பப்பரப்பேனு பரப்பி கூலா நீங்களும் உங்க ஃபோனும் இயங்கும்……..மனுஷன் மன்டை சூட குறைக்க எதாவது கண்டுப்பிடியுங்கப்பா – இந்த ஜில் ஜில் கூல் நவரத்னா ஆயில் வேலைக்கு ஆவலை அம்புட்டு சூடு .

Liquid Cooling Tech for your smart phone to reduce the heat

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்