மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்!

மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 5 முதல் 18–ந் தேதி வரை 12 நாட்கள் நடந்த (விடுமுறை நீங்கலாக) திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அட்டவணையும் தயாரிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த தொடரில் மக்களவையில் 4 மணி 30 நிமிடம் மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. மேல்–சபையில் 11 மணி 24 நிமிடம் கூட்டம் நடை பெற்றுள்ளது.
A view of the Indian parliament building is reflected on a car in New Delhi
தெலுங்கானா மற்றும் சில பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் பிரச்சினைகளை கிளப்பினர். இதனால் ஏற்பட்ட கடும் கூச்சல்– அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.

எனவே, 12 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டம் 2 நாட்களுக்கு முன்பே முடிவடைந்தது. அதாவது 10 நாட்களிலேயே கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

அதில் விசேஷம் என்னவென்றால் 10 நாள் கூட்டத் தொடரில் மக்களவையில் 4 மணி 30 நிமிடம் மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. மேல்–சபையில் 11 மணி 24 நிமிடம் கூட்டம் நடை பெற்றுள்ளது.

இக் கூட்டத் தொடரில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் மக்களவையில் 7 கேள்விகளுக்கு மட்டுமே மந்திரிகள் வாய் வழி மூலம் பதில் அளித்தனர். மேல்–சபையில் அதுவும் இல்லை. ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடிய வில்லை. அவ்வளவு கூச்சல், குழப்பம் மற்றும் அமளி நிலவியது.126 மசோதாக்கள் நிறைவேற்றப் படவில்லை. அவற்றில் மக்களவையில் 72 மசோதாக்களும், மேல் சபையில் 54 மசோதாக்களும் அடங்கும்.

அதே நேரத்தில் புதிதாக 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 2 மட்டுமே விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவை முக்கியமானதாக கருதப்படும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதாக்களாகும்.

Lok Sabha worked for just 4.5 hours during winter session
***********************************************************
The just-concluded winter session of the 15th Lok Sabha is the worst in terms of performance since 2010. Twelve days – December 5 to 18 – were scheduled for business but the session was adjourned sine die two days.