ஸ்மார்ட்போனின் விலை ரூ 1500 மட்டுமே! பயர்பாக்ஸ் அதிரடி
இந்தியாவில் அதிநவீன செல்போன்களை வாங்கி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய வித, விதமான ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் இந்திய சந்தைகளில் விறபனையாகி வருகிறது. தற்போது அவற்றை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் நிலையில் .இணைய உலாவி(Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் வெறும் 25 டாலர் (1500 ரூபாய்) மதிப்பிலான பயர் ஃபாக்ஸ் ஓ.எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக ஃபயர்பாக்ஸ் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை மொஸில்லா ஃபயர்பாக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.அதன் அடுத்தக் கட்டமாக தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் இந்த செல்போனை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுஇந்த பயர் ஃபாக்ஸ் ஓ.எஸ் செல்போன் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஓ.எஸ்-கள் இயங்கும் படி இதன் மென்பொருள் கட்டமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் அதிக அளவு ஸ்மார்ட்போன் விற்பனையாகியுள்ளதை தொடர்ந்து பயர் ஃபாக்ஸ் இந்திய மார்க்கெட்டை பயன்படுத்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்தியாவில் 5000 ரூபாய் முதல் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வருகிறது.இந்நிலையில் பயர் ஃபாக்ஸ் நிறுவனம் 1500 ரூபாய்க்கு அறிவித்துள்ளது ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.


