ராஜபக்‌சேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது:- பொலீவியா வழங்குகிறது

ராஜபக்‌சேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது:- பொலீவியா வழங்குகிறது

ஜி77’ நாடுகளின் உச்சி மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் ராஜபக்‌சே உரையாற்றுகிறார். அங்கு அவருக்கு பொலீவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
rajapakse
நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொலீவியாவில் நடைபெறும் ‘ஜி77′ நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்குபற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்காக அவர் ஆற்றிய பணிக்கென உயர் விருது ஒன்றை அந்த நாடு வழங்கி கௌரவிக்க இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.தென் அமெரிக்க நாடான பொலீவியாவுக்கு விஜயம் செய்யும் முதல் இலங்கைத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சே எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் ஜோன் டபிள்யூ. ஆஷ் உட்பட பலநாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பொலீவியாவில் கூடவிருக்கின்றனர். இவர்களுள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் நாடாளுமன்ற மேன்மை விருதை பொலீவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ் வழங்கிக் கௌரவிப்பார்.

சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிறுவகங்களுக்காக உழைத்த தனி மனிதர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அந்த சேவைக்காக வழங்கப்படும் அங்கீகாரமே இந்த விருது என பொலீவியா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சே இன்று கொழும்பிலிருந்து புறப்பட்டார். பொலீவியா மாநாட்டுக்காக வருகை தரும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை ஜனாதிபதி இரு தரப்புப் பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts